பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2018

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு!

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லை என்றால் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.


பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் மேல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் உங்களது ஐடிஆர் எனப்படும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். அவ்வாறு இணைத்துவிட்டால் வருமான வரிக் கணக்கை எளிதாக தாக்கல் செய்து விடலாம். இல்லை என்றால் மிகவும் கஷ்டம் என்று மத்திய நேரடி வரி வருவாய்த் துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி என முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிறகு இது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ஜூன் 30ம் தேதிக்குள் நிச்சயமாக இணைத்து விடுங்கள். இதன் மூலம் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படாது.

இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. இவ்விரண்டு எண்களையும் இணைக்காமல் ஒருவர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இயலாது. மத்திய நேரடி வரி வருவாய்த் துறையின் அறிக்கை இதனை தெளிவுபடுத்துகிறது. எனவே அனைவரும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் ஜூன் 30ம் தேதிக்குள் இணைத்து விட வேண்டும். அப்போதுதான் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டிய அவசியமில்லை.

1 comment:

  1. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய காலம் ஆவதால் இன்னும் நீடிக்கலாம். .... ஆதார் அட்டையில் உள்ள குளறுபடிகள் நாம் அறிந்ததே. ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி