தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி மையம் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2018

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி மையம் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 32 மாவட்டங்களி லும் ‘ஐஏஎஸ் பயிற்சி மையங்கள்’ விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார்.
அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினர் புலவர் வே. பதுமனார் வரவேற்றார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி முன்னிலை வகித்தார்.

விஐடி வேந்தரும் அறக்கட்டளை தலைவருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசும்போது, “அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பெற வேண் டும் என்ற நோக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளில் 3,919 மாணவர்கள் அறக்கட்டளை மூலம் பயன் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ரூ.80 லட்சம் கல்வித் தொகை வழங்கப்பட உள்ளது” என்றார்.

தமிழகத்தில் கல்வி புரட்சி

இதையடுத்து, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி பேசும்போது, “உயர் கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழக பாடப் புத்தகங்கள் யாராலும் மிஞ்ச முடியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி எந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும் தமிழக மாணவர் கள் எளிதாக எதிர்கொள்ளவே 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.அடுத்த வாரம் நீட் தேர்வுக் கான பயிற்சி வகுப்புகள் மாவட்டந்தோறும் தொடங்கப்படும். அடுத்த நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 1,000 பேர் தேர்ச்சி பெறக் கூடிய வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 5,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு நடவடிக்கைஎடுத்து வருகிறது.தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஐஏஎஸ் பயிற்சி அகா டமி தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மாவட்டந்தோறும் நடமாடும் நூலகங்கள் அமைக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகி றது” என்றார்.நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும்
    போராட வேண்டியிருக்கிறது.
    இதில் கல்வி புரட்சியாம்தூஊஊஊஊ..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி