தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% பேர் மட்டுமே தேர்ச்சி : இந்திய அளவில் தமிழக மாணவி 12-வது இடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2018

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% பேர் மட்டுமே தேர்ச்சி : இந்திய அளவில் தமிழக மாணவி 12-வது இடம்

MBBS படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை நாடு முழுவதும் இணையதளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே  வெளியிட்டது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். நாடு முழுவதும் மே 6-ம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்வை 13 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 170 மையங்களில் 1,07,288 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினார்கள். தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 5,398 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 24,726 பேர் விண்ணப்பத்திருந்தனர். அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவி கீர்த்தனாவை தவிர வேறு யாரும் தமிழக மாணவர்கள் இடம்பிடிக்கவில்லை.

தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 45,333 பேர் மட்டுமே நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12-வது இடம் பெற்றுள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரோகன் புரோகித் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 39.55% மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி