50 ஆண்டுக்கு முந்தைய பாடப் புத்தகங்களை படிக்கலாம்: டிபிஐ வளாகத்தில் இயங்கும் பாடநூல் கழக நூலகத்தில் புதிய வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2018

50 ஆண்டுக்கு முந்தைய பாடப் புத்தகங்களை படிக்கலாம்: டிபிஐ வளாகத்தில் இயங்கும் பாடநூல் கழக நூலகத்தில் புதிய வசதி

டிபிஐ வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல்கழகத்தின் சிறப்பு நூலகம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக் காக தமிழில் வெளியிடப்பட்ட பாடப்புத்தகங்களை படிக்கலாம்.
கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு பாடநூல் கழகம், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை வெளியிட்டு வந்தது.

தற்போது, தமிழ்நாடு பாடநூல் மற்றும்கல்வியியல் பணிகள் கழகம் என்ற பெயரில் சென்னை டிபிஐ வளாகத்தில் இயங்கி வரும் இந்நிறுவனம், பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியிடப்பட்ட அரசியல், வரலாறு, இயற்பியல், உளவியல், புவியியல், சமூகவியல், தத்துவம், மானிடவியல், வேதியியல், வேளாண்மை, பொறியியல், வானிலையியல் என பலதரப்பட்ட துறைகள் தொடர்பான அரிய புத்தகங்களைப் பொதுமக்கள் படிக்க வசதியாக டிபிஐ வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டிடத்தின் தரைத் தளத்தில் புதிய நூலகத்தை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் கூறியதாவது:இந்த நூலகம் திங்கள் முதல் வெள்ளி வரை வேலைநாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இயங்கும். பாடநூல் கழகத்தால் 50 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறுதலைப்புகளில் தமிழில் வெளியிடப்பட்ட சுமார் 1,000 புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் அவற்றை படிக்கலாம். வீட்டுக்கு எடுத்துச்செல்ல முடியாது. புத்தக ஆர்வலர்களுக்கு இந்த நூலகம் ஒரு வரப்பிரசாத மாக இருக்கும்.

இங்குள்ள புத்தகங்களின் பட்டியலை இணைய தளத்தில் வெளியிடவும் அவற்றில் வாசகர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆன்லைனில் பதிவுசெய்து பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வசதிவிரைவில் அறிமுகப் படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நூலகத்தில் அகராதி, அரசியல் இயற்பியல்,உள வியல், கல்வியியல், வரலாறு, சமூகவியல், மனையியல், வகை நுண்கணிதம், வேதியியல் தொடர்பான பல அரிய புத்தகங் கள் உள்ளன.பொறியியல், உலோகவியல், சமுத்திரவியல், நீர்ப்பாசனம் என தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

தமிழ்வழியில் பொறியியல் (சிவில், மெக்கானிக்கல்) படிக்கும் மாணவர்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பான பாடப்புத்தகங்கள் மிகவும் உதவி யாக இருக்கும்.மேலும், ஆங்கில வழியில் பிஏ, பிஎஸ்சி பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்களும் தங்கள் பாடங்களை எளிதாக புரிந்துகொள்ள தமிழ்வழி பாடப்புத்தகங்கள் வரப்பிரசாதமாக இருக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி