Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

BE - கவுன்சிலிங் நாளை தரவரிசை!

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. இதில், 1.08 லட்சம் பேருக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படும்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில் இருந்து, 'ஆன்லைன்' கவுன்சிலிங் அமலுக்கு வருகிறது. இந்த கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்க உள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, 1.08 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.விண்ணப்பித்த மாணவர்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் இன ரீதியான இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படுகிறது.

இதற்கான தரவரிசை பட்டியல், நாளை காலை, 8:30 மணிக்கு வெளியிடப்படுகிறது.சென்னை, அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பட்டியலை வெளியிடுகிறார்.கவுன்சிலிங் எப்போது நடக்கும், ஆன்லைனில் விருப்ப பாடத்தை பதிவு செய்வது எப்போது, என்ற விபரங்களும் நாளை வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives