மருத்துவ படிப்பில் கூடுதல் இடங்கள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2018

மருத்துவ படிப்பில் கூடுதல் இடங்கள்!!

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு,3,355; தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அதேபோல, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,095; தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 690 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதற்கான தரவரிசை பட்டியல், வரும், 28ல் வெளியிடப்படுகிறது.


முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறுகிறது.மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு, ஏழு, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, ஐந்து, எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. நடப்பாண்டில், 10, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி