மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் ஸ்மார்ட் கார்டு மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2018

மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் ஸ்மார்ட் கார்டு மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால், ஸ்மார்ட் கார்டு மூலம் அதனைக் கண்டறிந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பணியை சிறப்பான முறையில் ஆற்றி வருகின்றனர். 2 ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில், ஒரு ஆசிரியர் ஏதாவது காரணத்தினால் வராமல் இருந்தால், அது குறித்து ஆய்வு செய்யப்படும். ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படுகிறது.வருகை பதிவு விவரம்மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், ரத்தவகை, தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்படும். இதன் மூலம், மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால், அது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்களின் வருகை பதிவு, காலையும், மாலையும் சென்னை தலைமை அலுவலகத்துக்கு வந்து விடும். இதன் மூலம் அங்கிருந்தே மாணவர்களைக் கண்காணிக்க முடியும்.ஆசிரியர்கள் - மாணவர்களின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாதமும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்நடத்தப்படும். இதன் மூலம் தற்போது உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

விபத்து காப்பீடு

மாணவர்களுக்கு வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம், விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சம், பெரியகாயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரம், விபத்து நடைபெற்ற 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். இந்த திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

1 comment:

  1. தினகரன்
    தஞ்சாவூர்
    2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்
    4 June 2018, 2:04 am
    பட்டுக்கோட்டை, ஜூன் 4: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்ைக விடுத்துள்ளது. தமிழக அரசுக்கு தமிழ்நாடு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணிவாய்ப்பு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனே பணி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

    அதை ஏற்று உடனடியாக 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.


    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 40 என்று உள்ளதை 1: 30 என்று உருவாக்கினால் மட்டுமே கூடுதலான ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏற்படும். படித்து முடித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொடக்க கல்வியில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 30 என்று உள்ளது.

    இதேபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், மாணவர் விகிதம் 1: 30 என உருவாக்க வேண்டும். 2013ல் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்கள் அந்த தேர்ச்சி சான்றை வைத்து கொண்டு 7 ஆண்டுகளுக்குள் மட்டுமே பணிவாய்ப்புகள் பெற முடியும். தற்போது 5 ஆண்டுகள் கடந்து விட்டதால் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணி கிடைத்தால் மட்டுமே அந்த தேர்ச்சி சான்று பயன்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்றும் இதுவரை ஆசிரியர் பணி பெற முடியாத ஆசிரியர்கள் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர். எனவே தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் காலி பணியிடங்களை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை கொண்டே ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு துரிதமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது. பிஎட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை ç ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 40 என்று உள்ளதை 1: 30 என்று உருவாக்கினால் மட்டுமே கூடுதலான ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏற்படும். படித்து முடித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொடக்க கல்வியில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 30 என்று உள்ளது.

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    2013 ஆசிரியர் தகதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்காக குரல்கொடுத்த தமிழ்நாடு பிஎட் பட்டதாரி ஆசிரியர் சங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
    🙏💐💐💐💐

    இவண்
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
    வடிவேல் சுந்தர்
    மாநில தலைவர்


    ம.இளங்கோவன்
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    8778229465

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி