அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2018

அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு

தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சமமான விதிகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கான, விரிவான பொது சட்டத்தை,தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
அனைத்து, பள்ளிகளுக்கும், பொதுவான, ஒரே சட்டம், உருவாக்கியது, தமிழக அரசு,சட்டத்துறை,ஆய்வுஇந்த சட்டத்தின் அம்சங்களை, தமிழக சட்டத் துறை ஆய்வு செய்து வருகிறது.சுதந்திரத்துக்கு முன், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்காக, சென்னையில், டி.பி.ஐ.,என்ற பெயரில், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அடங்கிய, பொது உத்தரவு இயக்குனரகம் செயல்பட்டது. சுதந்திரத்துக்கு பின், தமிழகத்துக்கான பள்ளிக் கல்வி இயக்குனரகமாக, டி.பி.ஐ., வளாகம் மாற்றப்பட்டது.


தமிழக பள்ளிகள், 1892ல் இயற்றப்பட்ட, மெட்ராஸ் கல்வி விதிகளின் படி செயல்பட்டன. பின்,1920ல்,மெட்ராஸ் தொடக்க பள்ளிகள் சட்டம் அமலுக்கு வந்தது. இதை அடுத்து, 1973ல், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, தனியாக சட்டம் இயற்றப் பட்டது.இந்த சட்டப்படி, 1976 முதல், மெட்ரிகுலேஷன் பாடத்திட்ட பள்ளிகளுக்கு, சென்னை மற்றும் மதுரை பல்கலைகள் அனுமதி வழங்க, அரசு ஒப்புதல்அளித்தது.பின், 1994ல், தமிழ்நாடு கட்டாய தொடக்க கல்வி சட்டம் இயற்றப் பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தை, 2009ல் மத்திய - மாநில அரசுகள் தனித்தனியாக இயற்றின. இந்த சட்டங்களின் கீழ், நர்சரி மற்றும்பிரைமரி பள்ளிகளுக்கு தனியாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளுக்கு தனித்தனியாகவும்,அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றி, ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றன.இதனால், இந்த பள்ளி களின் பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் நியமனம், அவர்களுக்கான பணி விதிகள், ஊதிய விகிதம் என, அனைத்தும் வெவ்வேறாக பின்பற்றப்படுகின்றன.

இந்த விதிகளில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், நீதிமன்ற வழக்குகளின்போது, கல்விதொடர்பான வழக்குகளில் முடிவு எடுப்பதில், பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், சமமான நிர்வாக முறை இல்லாததால், ஆசிரியர்கள், பணி யாளர் நியமனங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டு உள்ளன.இந்த நிலையை மாற்ற, அனைத்து பள்ளி களுக்கும், ஒரே விதமான சட்டத்தை உருவாக்க, 40 ஆண்டுகளுக்கு முன்,உச்ச நீதிமன்றமும், பின், உயர் நீதிமன்றமும்பரிந்துரைத்தன. இந்நிலையில், தற்போதைய நிர்வாக சீர் திருத்தத் தின் முக்கிய அம்சமாக, அனைத்து பள்ளிகளுக்கு மான பொது பள்ளிகள் சட்டத்தை, தமிழக அரசு தயாரித்துள்ளது.இதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்த நிலையில், சட்டத்தின் முக்கிய அம்சங் களை, சட்டத்துறை ஆய்வு செய்யத் துவங்கி உள்ளது. விரைவில் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

முக்கிய அம்சங்கள் என்ன?

*அரசு பள்ளிகள், அரசு உதவி பள்ளிகள், மெட்ரி குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் மற்றும் தமிழக பாடத்திட்டத்தை நடத்தும், சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் ஆகியவற்றுக்கு, தற்போது அமலில் இருக்கும், தனித்தனி விதிகள்ரத்தாகும். இனி, புதிய சட்டத்தில்இடம்பெற்றுள்ள விதிகளையே, அனைத்து வகையான பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்

*மாணவர்கள் சேர்க்கையில், அரசு பள்ளிகளைப் போன்றே, நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும், இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும்

*அனைத்து பள்ளிகளுக்கும், தனியார்சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணயகமிட்டியே, கட்டணத்தை நிர்ணயிக்கும்

*ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில், அரசு பள்ளிகளின் அனைத்து விதிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் பின்பற்ற வேண்டும். சிறுபான்மை பள்ளிகளுக்கு, இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள சலுகைகளின் படி, இயங்க அனுமதிக்கப்படும். ஆனால் பள்ளிகள், பொது சட்டத்தையே பின்பற்ற வேண்டும்

*தனியார் பள்ளிகளின் ஆசிரியர், பணியாளர்களுக்கு, அரசு பள்ளிகளை போல ஊதியம் வழங்க வேண்டும். பணி நியமனங்களில், அரசு விதிக்கும் கல்வித்தகுதி மற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால், நியமன பணிகளை, தனியார் பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளலாம்.

*மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிஅமர்த்தப்பட வேண்டும். உள் கட்டமைப்பு விதிகளையும், அங்கீகார விதிப்படி மேற்கொள்ள வேண்டும். பொது பள்ளி சட்டத்தின் படியே, புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.இந்த அம்சங்கள் எல்லாம், புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

8 comments:

  1. ஹ ஹா ஹா ஹா *5.😂😂😂
    ஒரே காமெடி இல்ல.. ஒன்லி காமெடி.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அனைத்து பள்ளிகளிலும் ஒரே சட்டம் இயற்றுவது எல்லாம் சரியே...
    ஆனால்
    ஒரே சமமான கல்வியைத் தர முயற்சித்தால் தான் நீங்கள் கூறிய சமமான என்ற வார்த்தை க்கு அர்த்தமே இருக்கும்....
    இந்த ஒரே சட்டம் என்பது மேலோட்டமாக பார்த்தால் பராவாயில்லையே ஏதோ ஒரே விதமான சமமான கல்வியை பெற்ற அனைத்து விதமான மாணவர்ளுக்கும் ஏதோ சமமான கல்வியை தகுதி கொடுத்து சரிநிகர் சமமான சமூகத் தினை உருவாக்க உள்ளதாக மகிழ்ச்சி அடையசென்றால்,
    தலைப்புக்குள் இருக்கும் சாராம்சம் தான் எங்கும் விளக்கங்களை ஏற்படு த்துகின்றது....
    அனைத்து பள்ளிகளிலும் மாணவர், ஆசிரியர் சேர்க்கைகளை,பள்ளிகொண்ட டம் நிர்ணயம் செய்வதே போன்றவை வெளி படத்தன்மையுடன் அரசே இட ஒதுக்கீடுகள் முறையில் நடத்தினால் குளறுபடிகள் நடக்காது என்று உறுதி கூறமுயவில்லையென்றாலுமா குளறுபடிகள் வெளிப்படையாக ஏதாவது ஒரு வகையில் தெரியும் என்ற பயத்தினால் கொஞ்சமாவது நேர்மையாக நடத்த முயற்சிக்கலாம்......
    மேலும்
    தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகள் போன்றவற்றை அரசு பள்ளிகளிலும் கொண்டு வந்து நியாயமான அனைவருக்கும் சமமான கட்டணம்(பொருளாதார,சமூக அடிப்படை மில் பின் தங்கிய வர்களுக்கு மட்டும் சலுகைகள் கண்டிப்பாக வேண்டும்) அளிக்கலாம்.....

    ReplyDelete
    Replies
    1. Super sir ..... It's 100 % true words sir .....

      Delete
  4. சிறுபான்மையினருக்கு tet வேண்டாம். இது தான் ஒரே சட்டமா

    ReplyDelete
  5. Matric school teacherku government level salary kanavula kuda thara matttanunga.

    ReplyDelete
  6. Matric school la epudi govt salary tharuvanga ithelam nadakura visayama

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி