வேளாண் இட ஒதுக்கீடு: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2018

வேளாண் இட ஒதுக்கீடு: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு

வேளாண் படிப்புகளில், சிறப்பு இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்களுக்கு, நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன.
இந்த கல்லுாரிகளில், 12 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.நடப்பு கல்வியாண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பம், இன்றுடன்முடிகிறது. வேளாண் படிப்புகளில், நான்கு பிரிவினருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதில், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு, எட்டு இடங்கள், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, ஐந்து இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு, 30 இடங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு, ஓர் இடம் என, மொத்தம், 44 இடங்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் அளிக்கப்படுகின்றன.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளை துவங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது. இதில், அனைத்து அசல் சான்றிதழ்களுடன், மாணவர்கள் நேரில் பங்கேற்க வேண்டும் என, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
    மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....

    நாள்: 25/06/2018
    இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.

    இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
    *துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*

    இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
    இப்போது தெரியபடுத்துகிறோம்.
    இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
    கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்

    🔥 TET சான்றிதழ் நகல்மூன்று

    🔥பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு

    🔥ஆபிஸ் கவர் ஒன்று

    🔥உறுப்பினர் பதிவு மற்றும் தொகுப்பூதியத்திற்கான கட்டணம் ரூபாய் 125
    கொண்டுவரவேண்டும்


    💥💥💥💥💥💥💥💥💥💥
    இவண்
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

    இளங்கோவன்
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    8778229465


    வடிவேல்சுந்தர்
    மாநில தலைவர்
    8012776142

    சிவக்குமார்
    மாநில செயலாளர்
    ( ஊடகபிரிவு)
    9626580103

    உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி