பதவி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்படும் வரை தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2018

பதவி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்படும் வரை தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

பதவி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப் போவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

 இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


 தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்றது.
 இதில், ஜூன் 19ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது.

 அதன்படி, ஜூன் 21இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதும் காலிப்பணியிடம் இல்லை எனவும், அதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டாதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடையாது எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 15 ஆண்டுகளாக தமிழக பள்ளிக் கல்வித் துறை புறக்கணித்து வருகிறது.
 எனவே இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்து உரிய அரசாணை வெளியிடப்படும் வரை தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. Avan avan velai ilama kastapadurom epo paru poratam poratamnu pogangaya poi bila kuttya padika vainga.

    ReplyDelete
  2. B.Ed mudichu tet pass panavangaluku velaipodungda pa. Promotion parthil insentive salary Bt equal vankikanga promotion perula padichu veliyave irukaranga ena agurathu promotion venumna department exam vachithantha supper

    ReplyDelete
  3. ஒரு இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வில் சென்றால் அவர் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் பணியிடம் பட்டதாரி பணியிடமாக மாற்றப்படும்.....அதனால் புதிய பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதனை உணர்க நண்பரே....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி