திரைப்படமாகிறது ஆசிரியர் பகவான் - மாணவர்கள் பாசப்போராட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2018

திரைப்படமாகிறது ஆசிரியர் பகவான் - மாணவர்கள் பாசப்போராட்டம்!

அரசுப்பள்ளி ஆசிரியருக்கான பணிநிரவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பாசப்போராட்டம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியில் தலைமைஆசிரியர் உட்பட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியாக பணியாற்றி வரும் பகவான் என்பவர் பணிநிரவலில் திருத்தணி அருகே  அருங்குளம் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால்  ஆசிரியர் பகவானை பணிநிரவல் செய்யக்கூடாது என்று பள்ளி மாணவர்கள் 280 பேர் வகுப்புகளை புறக்கணித்து அவர்களது பெற்றோருடன்  பாசப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இத்தகைய உணர்ச்சிகரமான பாசப்போராட்டம்  காரணமாக ஆசிரியர் பகவானின் பணி நிரவல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அதே பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை: இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் அன்புச்செல்வம் நேற்று பள்ளியில்  தலைமை ஆசிரியர் அரவிந்த் மற்றும் 19 ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். ஆசிரியர்களிடம் பெறப்பட்ட விவரங்கள் அனைத்தும் முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டகல்வி அலுவலர் தெரிவித்தார்.

திரைப்பட இயக்குநர்கள் பகவானிடம் பேச்சு : ஆங்கில ஆசிரியர் பகவான் பணி நிரவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் போராட்டம் ஆசிரியர் மீது மாணவர்களின் ஈர்ப்பு, மாணவர்களிடம் ஆசிரியரின் அணுகுமுறை குறித்து  தொடர்ச்சியாக செய்திகள் வெளி வந்த நிலையில் சென்னையை சேர்ந்த திரைப்பட  இயக்குநர்கள் இருவர் வெளியகரம் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் பகவானிடம்  ஆசிரியர்களின் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து திரைப்படம்  எடுப்பது குறித்து விவாதித்தனர்.

கல்வி அமைச்சரை சந்திக்க கிராமமக்கள் முடிவு: ஓரிரு நாட்களில் பணி நிரவல் பெற்ற  பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று  கல்வித் துறை அதிகாரிகள் ஆசிரியர் பகவானுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனை அடுத்து கிராமமக்கள் ஒன்று கூடி சென்னையில்  கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை இயக்குநரை சந்தித்து முறையிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக  பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில்  நடைபெற்ற கூட்டத்தில் கிராம மக்கள் தீர்மானித்துள்ளதாக கிராம முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

1 comment:

  1. ⚫⚫⚫⚫⚫⚫⚫
    முக்கிய அறிவிப்பு!

    போராட்டம் ரத்து.....

    25/06/2018 சென்னயைில் திட்டமிட்ட போராட்டத்திற்கு, காவல்துறையினரின் அனுமதி கிடைக்காததால்
    அன்றைய தினம் நடக்கவிருந்த போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யபடுகிறது.

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி