படித்துவிட்டு வேலை இல்லை என்ற நிலையை உருவாக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2018

படித்துவிட்டு வேலை இல்லை என்ற நிலையை உருவாக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்: அமைச்சர் செங்கோட்டையன்

எதிர்காலத்தில் தமிழகத்தில் பிளஸ் 2 முடித்தாலே மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்களின் மெட்ரோ மாநாட்டில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சி.ஏ படிப்பு குறித்து இரண்டு நாள் கருத்தரங்குக்கு அழைத்தமைக்கு நன்றி. சி.ஏ. பயிற்சிக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர்கள் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி அளிக்க உள்ளனர். பட்டய கணக்காகளர் படிப்புக்கு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 25 நாட்களில் 75 இடங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக்காக பட்டய கணக்காளர் நிறுனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சி.ஏ. என்று சொல்லப்படும் ஆடிட்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், பேசிய அவர், தமிழகத்தில் பொறியியல் படிப்பு முடித்து 1.60 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். எனவே, படித்துவிட்டு வேலை இல்லை என்ற நிலையை உருவாக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். 12 ஆம் வகுப்பு முடித்தாலே வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது. மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த நூலகத்தை தர வேண்டும் என்ற முறையில் அனைத்து மாவட்டங்களுக்கு நடமாடும் நூலகங்கள் மிக விரைவிலேயே ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 15 பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன. ஓட்டல் மேலாண்மை, மருத்துவமனை மேலாண்மைக்கு பயிற்சி வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு. அந்தந்த ஊர்களில் உள்ள தொழில்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். திருப்பூர் மாணவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி, ஆடை வடிவமைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும், 412 மையங்களில் ஜூலை மாதம் முதல் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் பயிற்சிபெறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். 

5 comments:

  1. படித்து முடித்தவனுக்கு அராங்கவேலையே இனி கனவிலும் எப்பவும் நினைத்துப் பார்க்கவே கூடாது
    என்ற நிலையில் உறுதியாக இருக்கிற மாதிரி தான் தெரியுது........
    ஏனெனில்

    1.டெட் பல வருடங்களாக எழுதுறாங்க,எழுதிக்கிட்டுஇருக்காங்க,வயது போகும் வரை எழுதிக்கிட்டேதான் இருக்கிறாங்க.....

    2.டெட்டோ,டி.ஆர்.பியோஎழுதினாலும் வினாவில் குளறுபடிகள்,பதில்களிலும்குளறுபடிகள் என தேர்வு ரத்து திரும்ப ரிப்பீட்டு.....

    3.அப்படியே இதையும் தாண்டி தப்பிபிழைத்துவந்தால் வெயிடேஜ்,அது மேல் கேசுவேற
    வெயிட்டேஜ்முறையை சரியாசெய்யவைக்கிறதுக்கு ஒரு குழுன்னு
    ஒன்னுவைப்பீங்களே
    அது கிணத்துல போட்ட கல்லுமாதிரி கூட கிடையாது சமூத்திரத்தில் போட்ட கல்லு.
    குழுவோட முடிவு இந்த மாசம் வந்துடும் அடுத்த மாசம் வந்துடும்னு காத்து காத்து மாதமாகி குழந்தை பிறந்து அது ஸ்கூல்ல சேந்துரும்....

    4.அதையும் தாண்டி வந்தா
    செலக்ஸ்சன் லிஸ்டில் குளறுபடிகள், முன்னுரிமை ஒதுக்கீடுகளில் குளறுபடிகள் என ரிசல்ட் வெளியிடுவதில் தாமதம் அல்லது முறைகேடின் காரணமாக அனைத்தும் ரத்து.....
    5.அழித்துவிட்டு திரும்ப ஆரம்பத்திலிருந்து வரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளி,தள்ளி வயதும் சீனியாரிட்டியும் போகும் அளவிற்கு ரொம்ப அழகா செய்யுறீங்கள்..

    6.இதில் ஒன்றே ஒன்று நல்லது நடக்குது என்றால்
    லட்சக்கணக்கானவர்கள் வெறும் நூறு (அல்லது) ஆயிரம் வேலைவாய்ப்புக்காக
    திரும்ப திரும்ப அப்பிலே செய்வதால் அரசாங்கத்திற்கு நல்லா வருமானம் வருது.....

    நல்லாசெய்யுருங்க ரொம்ப அழகா வைச்சு வைச்சு செய்யுறீங்க.....

    நீங்கள் சொல்கிறது தகுதி தேர்வை க்கூட நடத்திக்குங்க
    ஆனா
    முறைகேடே நடக்காத வண்ணம்
    தேர்வுஎழுதும் அனைவரின் விடைத்தாளின் கார்பன் காப்பியை கையுடன் எடுத்துச்செல்லும் முறையில் இருந்தால் விடைத்தாள் திருத்தும் இடத்தில் பணம் செலவழித்து குறுக்கு வழியில் வர நினைப்பவர்களை சிறிது தடுக்கலாம்...
    மேலும்
    தகுதித்தேர்வில் தேர்ச்சி+சீனியாரிட்டி என்ற முமுனையிலும் குறுக்கு வழியை தடுப்போதோடு மட்டுமின்றி நியாயமாக படித்து பல வருடம் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரியும் ஆச்சு அதே நேரத்தில் குளறுபடிளைத் தடுத்த மாதிரி ஆச்சு....
    கடைசி யாக ஒன்று வேலைவாய்ப்பிற்கான இடங்களையும் வருடா வருடம் அதிகரிப்பதன் மூலம் நடத்த அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்த மாதிரியும் ஆச்சு அதே நேரத்தில் அரசுப்பள்ளியில் தரத்தை உயர்த்த தேவையான கட்டமைப்பையும் மேம்படுத்தினால் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும்...
    இதை அனைத்தையும் செய்ய மனமிருக்கு ஆனா நிதியில்லை என்ற சாக்கு போக்கு சொல்லாமல் தனியார் பள்ளியில் வசுளிப்பதுபோல்முழுதொகையையும் மக்களிடம் பெறாமல் பாதி அரசும் மீதியை மக்களிடம் அவர்களின் பொருளாதாரசூழல்அடிப்படையில் கட்டணங்களை வசூழிக்கலாம் இதில் எந்த தவறும் இல்லை....
    ஏனெனில் தனியாரிடம் முழுதாக செலவழித்து படிப்பதை விடபொருளாதார தகுதிக்குஏற்ப அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்தி படிப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் வீட்டின் அருகிலேயே பள்ளி மில் படித்தமாதிரி ஆனது அதேநேரத்தில் அனைவரும் கட்டணசெலவில் வித்தியாசப்பட்டாலலும் சமமான கல்வியை பெறமுடியும்.‌‌
    அதேநேரத்தில் படித்த அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பு கிடைத்தமாதிரியும் ஆகும்....


    ReplyDelete
    Replies
    1. Boss kaasu ilaamalam illa. private scl nadataradee ivanunga dhan ( direct or indirect ).kaasu vaangi kittu develop panna maataanunga govt scl ahh .ippo nadakaradellam election kaaga (syllabus ,adiradi arivipellam )

      Delete
  2. நான் 2013ல் TET தேர்வில் தேர்ச்சி பெற்றேன் எனக்கு வயது 38 மதிப்பெண் குறைவு எனக்கு வேலை உண்டா? இல்லையா?

    ReplyDelete
  3. Am 2017 passd candidate job kedaikuma???list eppo varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி