மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை?? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2018

மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை??

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதை அடுத்து, மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் தேதி மற்றும் கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை என்பது குறித்த விபரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்பில் சேர தமிழகமாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 25 ம் தேதி முதல் துவங்கும். நாடு முழுவதும்ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்படும்.

முதல் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்கள் ஜூலை12 க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். 2 ம் கட்ட கவுன்சிலிங் ஜூலை 15 முதல் 26 வரை நடைபெறும்.2 ம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 3 ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

பொதுப்பிரிவு மாணவர்கள் 720 மதிப்பெண்ணுக்கு 119 மதிப்பெண் எடுத்தால் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதியாகும்.இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்எடுத்திருக்க வேண்டும்.

ஓசி பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Oc students only getting to chance to participate for 119 marks. Others?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி