ஜூலையில் இன்ஜி., கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2018

ஜூலையில் இன்ஜி., கவுன்சிலிங்

''அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தமிழக அரசின் சார்பில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.59 லட்சத்து, 631 பேர் விண்ணப்பித்துஉள்ளனர். இவர்களில், 59 ஆயிரத்து, 416 பேர் மாணவியர். கவுன்சிலிங்கில், தரவரிசை பட்டியல் தயார் செய்வதற்கான, 'ரேண்டம்' எண், நேற்று வெளியிடப்பட்டது.

உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன், முதன்மை செயலர், சுனில் பாலிவால் ஆகியோர், ரேண்டம் எண் பட்டியலை வெளியிட்டனர்.பின், அமைச்சர் அளித்த பேட்டி: மாணவர்களின் தரவரிசை பட்டியலை நிர்ணயிக்கும் போது, ஒரே மதிப்பெண் உள்ள மாணவர்களை வரிசைப்படுத்துவதற்கு, ரேண்டம் எண் உருவாக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங் முறையில், விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்வதன் வழியாக, மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்படும்.

இதற்கான கவுன்சிலிங்கை, ஜூலை, 6ம் தேதி துவங்க திட்டமிட்டுள்ளோம். மருத்துவ கவுன்சிலிங் தேதிக்கு ஏற்ப, இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி மாறுபடும்.கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 18 ஆயிரத்து, 500 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 631 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ஜூன், 8 முதல், 14 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. Flash News.

    06/06/2018 இன்றையதினம் சட்டசபையில் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது விவாதம் நடைபெறுகிறது.

    இவண்
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
    இளங்கோவன்
    8778229465
    வடிவேல்சுந்தர்
    8012776142

    ReplyDelete
    Replies
    1. முட்டாளே.. தி மு க என்ன கேட்டது என்று தெரியாமல் உலறிக்கொண்டு தெரியாதே. திரு. செங்கோட்டையன் என்ன கூறினார் என்பதை தெரிந்து இனிமேலாவது உருப்படும் வழியை பாருங்கள் 2013 முன்னுரிமை கும்பலே.

      சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்று காலிப்பணியிடத்துக்கேற்ப தரவரிசை பட்டியலில் இடம்பெற்றால்தான் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.


      இதில் 2013 முன்னுரிமை என்று கேட்டார்களா.. நீங்கள் எப்போது தேர்ச்சி பெற்றாலும் தகுதி தேர்வு, வெயிட்டேஜ், இன சுழற்சியில் இடம் பெற்றால் மட்டுமே பணி வழங்கப்படும் என்று இப்போதும் கூறி விட்டார். இது புரிஞ்சாலும் புரியாத மாறியே நடிப்பாங்க அறிவிலிகள்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி