அரசுப்பள்ளிகளை மூடுவதை எதிர்த்தும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரியும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2018

அரசுப்பள்ளிகளை மூடுவதை எதிர்த்தும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரியும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது!

அரசுப்பள்ளிகளை மூடுவதை எதிர்த்தும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரியும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் சென்னயைில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கலைவானர் அரங்கம் அருகே இருந்து புறப்பட்ட அவர்கள் வாலாஜா சாலையில் அரசு விருந்தினர் மாளிகை வழியாக தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து அரசு விருந்தினர் மாளிகை அருகே சாலையில் அமர்ந்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தை அடுத்து தலைமை செயலகம் செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். தடைகளை மீறி போராட்டக்காரர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடாதபடி போலீசார் சாலைகளில் தடுப்புகளை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். தடையை மீறி உள்ளே சென்ற மாணவர் பெருமன்றத்தினர் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

1 comment:

  1. neet must be compulsory otherwise no school will teach the proper full lesson in the higher secondary examination, there should be state level entrance test for engineering and arts and science course too. simply giving too much importance to board examinations won't help the students to acquire more knowledge.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி