இந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2018

இந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் !

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும்

இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே வாதம் புரியாமல் ஏற்கிறேன் இந்தக் கருத்தை முன் மொழிந்தவர்களுக்கு தலையும் வணங்குகிறேன்,


ஆனால்? ???
ஆனால்???

எனக்கு ஒரு ஐயமும் உள்ளது அதற்கு உங்களிடம் தான் தீர்வும் உள்ளது என்பதை நான் அறிவேன் அதற்காகத்தான் இதைப் பதிவிடுகிறேன்

2012 க்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களே இன்று இளைஞர்கள்கள் அதிலும்20 ஆயிரம் பேர்தான் உள்ளோம் இதில் பெண்களில் பாதிப்பேர் ஏற்கனவே திருமணமானவர்கள் அப்படி இருக்கையில் 20 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர் என்றே வைத்துக் கொள்வோம்

இதற்கு முன் உள்ள ஆசிரியர்களின் குழந்தைகள் பள்ளிப்படிப்பை கடந்துவிட்டார்கள் என்பதால் அவர்களை இணைக்கவில்லை

20 ஆயிரம் குழந்தைகளும் சேரவேண்டும் சேர்க்கவேண்டும் இதில் பல ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளனர் அதையும் நாம் உணரவேண்டும்

இங்குதான் எனக்கு சில ஐயம் எழுகிறது?

இவர்கள் அனைவரும் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் என்ன மாற்றம் வரும்?

நீங்கள் ஒன்றை உணர வேண்டும் அரசுப்பள்ளி கட்டிடங்களும், ஆசிரியர்களும் தரமாக உள்ளனர் அப்படி இருந்தும் ஏன் அரசுப்பள்ளியில் சேர்க்கை இல்லை??

ஏனெனில் சில ஆயிரங்களில் சம்பாதிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அனைத்து திறமைகளையும் கற்றுத்தரும் பள்ளியையே தேர்வு செய்கிறார்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா?

தனியார் பள்ளியில் என்னென்ன வசதிகள் உண்டு அதை நடத்துபவர்கள் யார்? பட்டியலிடுவோமா?

தனியார்பள்ளி

1.பேருந்துவசதி
2.நடனம், நாட்டிய பயிற்சி,
3.இசைப்பயிற்சி
4.கராத்தே
5.ஹிந்தி
6. சிலம்பப் பயிற்சி
7. தரமான விளையாட்டுப் பயிற்சி அதற்கென ஒதுக்கப்பட்ட மைதானங்கள்
8. Ncc. Nss. போன்ற திட்டம் அதற்கென பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட பல ஆசிரியர்கள் உண்டு

9.பணம்கட்டி படிக்க டியூசன்கள் உண்டு

10. நாளுக்கேற்ற ஆடை, டை, சூட் கோட்

11. முக்கியமா பாதுகாப்பு கேட்டை விட்டு வெளியவரமுடியாத பாதுகாப்பு

12. ஸ்மார்ட் கிளாஸ்

இதெல்லாம்தான் பெற்றோர்களை தனியார்பள்ளியை நோக்கி ஈர்க்கிறது

என்பதை உணரவேண்டும்

பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீது சற்று அக்கறை அதிகம் பள்ளியில் நடக்கும் மீட்டிங் எல்லாம் வருகிறார்கள் ஆசிரியர்களை கண்டிக்கச் சொல்கிறார்கள்,  ஆனால் அரசுப்பள்ளியில் ??

அரசுப்பள்ளியில்
1.கட்டிடம் உண்டு
2. ஆசிரியர் உண்டு
3. கழிவறை வசதிகள் சில இடங்களில் உண்டு பல இடங்களில் இல்லை

4. பேருந்துவசதி இல்லை பஸ்பாஸ்உண்டு

5. கராத்தே,  சிறப்பான உடற்கல்வி பயிற்சி, ஹிந்தி,ஸ்மார்ட் கிளாஸ்
ம் இதுல எதுவும் இல்லை

பள்ளிக்கு வாடா னு சொல்லிக் கேட்டாலும் வரமாட்டான் பிள்ளையை கையை பிடித்து இழுத்தாலும் ஏன்டானு கேட்க கூடாது பெத்தவனும் பள்ளிக்கு வரமாட்டான்,  படிக்கலனா திட்டவும் கூடாது,  திட்டினால் ஆசிரியருக்கு சிறைதான்

இப்படியான சூழலில் இருக்கும் அரசுப்பள்ளியில்

ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தால் தான் பள்ளி சிறப்பாக இருக்கும் என்று கூறுவது சரியா ?

அரசுப்பள்ளிகளின் தரம் உயர்தல் என்பது ஆசிரியர்களின் பிள்ளைகளை சேர்த்தால் மட்டும் வந்துவிடுமா??

இப்படி ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம்  தருகிறோம் தங்கள் பிள்ளைகளை சேர்க்க மறுக்கிறார்கள் என்று ஆசிரியர்களை சமூகபார்வைக்குள் சிக்கவைத்தவர்கள் யார்?

அரசு ஏன் 25% ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் அதாவது இந்த ஆண்டுமட்டும் 4 லட்சத்திற்கு மேல் மாணவர்களை தனியார்பள்ளிக்கு பணம் கட்டி படிக்கவைக்க அனுப்பவேண்டும் வேண்டும்

அட ஆண்டுக்கு 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளிக்கு அரசு அனுப்புகிறதே அவர்கள்தான் ஏழை என்றால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார்? பணக்காரர்களா??

20 ஆயிரம் ஆசிரியர்கள் 20 ஆயிரம் குழந்தைகளை ஒருமுறைதான் பள்ளியில் சேர்க்கமுடியும் ஆண்டுக்கு 20 ஆயிரம் குழந்தைகளையா அவர்கள் பெற்று அரசுப்பள்ளிக்கு அனுப்பமுடியும்???

ஆண்டுக்கு 4லட்சம் மாணவர்களை 25% இட ஒதுக்கீட்டில் அனுப்புவதை ஆசிரியர்களும், சங்கங்களும் எதிர்த்தோம் அதை மறைக்க எங்கள் மீது இப்படி ஒரு பழியை அரசு சுமத்துகிறது,  இதை ஏன் நீங்கள் கேட்கவில்லை?

ஆண்டுக்கு 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளியில் அரசு சேர்பதற்கு என்ன காரணம்?

காரணம் அரசியல்வாதிகளே, அவர்களின் உறவினர்களே, அதிகமாக தனியார்பள்ளியை நடத்துகிறார்கள்,

அவர்களின் பள்ளியை காக்கவும் அவர்கள் சம்பாதிக்கவும் அரசுப்பள்ளியையும் ஆசிரியர்களையும் பலியாக்குவது சரியா?

அரசு நினைத்தால் எதையும் செய்யலாமே ஏன் உத்தரவை பிறப்பிக்க முடியவில்லை அரசு வேலை வேண்டும் எனில் அத்துணை அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியில் தான் தங்கள் பிள்ளைகளை சேர்க்கவேண்டும் என்று ஏன் உத்தரவு பிறப்பிக்கவில்லை

இதைக்கேட்க எவருக்கும் துப்பில்லை ஆனால் எங்களை கேள்வி கேட்கமட்டும் ஓடிவருவீர்களே

அத்துணை அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியில் சேர்க்கும் போது தானாகவே அரசுப்பள்ளியின் தரம் உயரும்,

கலெக்டர் பிள்ளையும், கூலிவேலை செய்பவரின் பிள்ளையும் ஒன்றாக அரசுப்பள்ளியில் பயில்வார்கள்,

அத்துணை அதிகாரிகளின் பிள்ளைகளும் அரசுப்பள்ளியில் படிக்கும் போது சத்துணவு சத்தான உணவாகும்,

கட்டிடங்களும் கழிவறைகளும் ஸ்மார்ட் கிளாஸ்களும் தானாகவே வந்துவிடும்,

தனியார்பள்ளியில் பணம்கட்டி படிக்கவைத்தவர்கள் எல்லாம் அரசுப்பள்ளிக்கு வந்துவிட்டால்  ,கௌரவத்திற்காக சேர்த்தவர்களும் வந்துவிடுவார்கள்,

இப்போது தனியார்பள்ளிகளின் நிலைமை தற்போது இருக்கும் அரசுப்பள்ளிகளைப் போல் ஆட்கள் இல்லாமல் போவர்,

இதனால் தான் அரசால் இப்படி ஒரு சட்டம் இயற்றமுடியவில்லை

இயற்றினால் தங்கள் பள்ளிக்கு வருமானம் வராதே,  அட ஆசிரியர்களையாவது கட்டாயம் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடுவார்களா?  முடியாது?  4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளிக்கு விற்பதையாவது நிறுத்துவார்களா? இதுவும் முடியாது?

இதையெல்லாம் நீங்கள் கேட்கமாட்டீர்கள் ஏனெனில் லஞ்சம் வாங்குபவர்களோடு வெறும் சம்பளம் மட்டுமே வாங்கும் எங்களை மட்டும்தானே குறைகூற அரசியல்வாதிகள் பழக்கி இருக்கிறார்கள்

அரசுவேலையில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் எந்த ஆசிரியர் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்கள் உங்களால் பட்டியல் தரமுடியுமா??

வீடு வாங்கியிருப்பார், தன்பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தந்திருப்பார் மீறினால் 5-10 ஏக்கர் நிலம் வைத்திருப்பார் இதைத்தவிர ஆசிரியரிடம் நீங்கள் பார்த்த வசதி என்ன?

பட்டியலிடுங்கள் பார்க்கலாம்

ஆசிரியரை அடக்குவது கல்வியை தனியார்பள்ளிக்கு தாரைவார்ப்பதற்கே எதிர்காலத்தில் ஏழை மாணவர்களுக்கு என்று கல்வி கற்க இடமில்லாமல் போகும் அதை முதலில் உணருங்கள்

நாங்களும் தேர்வெழுதியே வந்தோம், அரசுப்பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் உங்களை அரசின் வேறு பணிக்கு மாற்றுகிறோம் என்று அரசு சொன்னால் நானே முதல் ஆளாக ஆசிரியப்பதவியை ராஜினாமா செய்து அரசுப்பணிக்கு செல்வேன் ஆசிரியர்களுக்கு எதிராக பேசுபவர்களே எங்கள் அத்துணைபேரையும் வேறு அரசுப்பணிக்கு மாற்றச்சொல்லுங்கள்

அரசுப்பள்ளியை தனியாருக்கு விற்றுவிடச்சொல்லுங்கள் அப்போதுதான் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பணம் கட்டி தனியார்பள்ளியல் தரமான கல்வியை பெற முடியும்,

ஏனெனில் நாங்கள்தானே உங்களுக்கு இடஞ்சல் அரசும் அப்படித்தானே எங்களை உங்களுக்கு காண்பிக்கிறது,

தயவு செய்து எங்களை அரசு அலுவலகத்திற்கு பணிமாற்றச் சொல்லுங்கள் எங்களுக்கு பள்ளியில் வேலை செய்வதைவிட அரசு அலுவலகத்தில் வேலை செய்வதே எளிமை,

நான் ஒரு ஆசிரியன் என்று மாணவர்கள் மத்தியில் பெருமையும் மக்களாகிய உங்களுக்கு மத்தியில் வெட்கமும் கொள்கிறேன்.

நன்றி
Asiriyar kural Facebook 

38 comments:

  1. Wow no way to express our feelings thanks bro all are true

    ReplyDelete
  2. அந்த வெங்காயம் எல்லாம் இருக்கட்டும் நீங்க உங்கள நம்பி வந்த மானவர்களை சரியா அனுப்புங்க அப்பறம் எல்லாரும் உங்களை தேடி வருவாங்க

    ReplyDelete
    Replies
    1. antha vengayatha mothalla neenga seinga mr suuuuuuuuuuuuuuuuuuuuna naaaaaaaaaaaaaaanaaaaaaaaaaaaaaa

      Delete
    2. All govt teachers only looking MONEY but private school teachers gives education with low salary

      Delete
  3. Thank u so much to upload this real fact sir.But Govt should understand and try to implement them.

    ReplyDelete
  4. pala korikaigalai mun vaithu pooradum neengal arasu ooliyargalin pillaigalai arasu palliyil serka vendum entra korikaigalaium mun vaiyungal....

    ReplyDelete
  5. உண்மை தான் தோழரே
    உங்கள் வார்த்தைகள் அனைத்தும் முற்றிலும் உண்மை.....

    ஆனால்

    சில கேள்விகள் மட்டும் பதிலை நோக்கி..

    1.ஏன் அரசிடம் அரசுப்பள்ளியின் அடிப்படைத்தேவையான
    சுத்தமான கழிப்பிடங்கள்
    சுத்தமான குடிநீர்
    பாராமரிக்கப்பட்ட மைதானம், நூலகங்கள், ஆய்வகம் மற்றும் முறையான போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை மாணவர்களுடன் சேர்ந்து தங்களின் தேவைக்கும் சேர்த்து தரமறுப்பதை வழியுருத்தி போராட்டம் நடத்தக் கூடாது
    கண்டிப்பாக இதற்கு மக்களும் சேர்த்து தங்களுடன் போராடுவார்கள்...
    2.தவறுசெய்யும் அதிகாரியாக இருந்தாலும் ஆசிரியர்களாகயிருந்தாலும் அவர்களை தண்டனை பெரும் வகையில் எதிர் கேள்வி கேட்காமல் அரசு ஊழியர்கள் சங்கம் செயல்படுகிறது....

    3.உங்கள் கண்முன்னே தெரியும் நேர்மையாக செயல்படுகின்ற அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் துயரங்கள் மற்றும் பழிவாங்கும் முயற்சி கள் போன்ற வற்றில் நீங்கள் குரல்கொடுத்தாலும் அவ்வகை துன்புறுத்தல்கள் திரும்ப நிகழாவண்னம்யிருப்பதற்கான செயல்திட்டங்களை உடனே உடனே செய்திருந்தாலதவறுகள் திரும்ப நிகழலாம் இருக்கலாமே......
    இவை சிறிய சிறிய மாற்றங்கள் உருவாக்கி நாளை அரசுத்துறை தான் சிறந்தது என்று மக்களால் மட்டுமின்றி ஆளுநர் எவராயினும் அரசுத்துறையை மதிப்புடன் பார்க்வைக்கும் அல்வா....

    ReplyDelete
  6. Good but எத்தனை ஆசிரியர் அவர்கள் வேலையை ஒழுங்காக செய்கிறார்கள்

    ReplyDelete
  7. எத்தனை ஆசிரியர் அவர்கள் வேலையை ஒழுங்காக செய்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் பார்த்தவரையில், தற்பொழுது வேலை பார்க்கும் அரசு ஆசிரியர்கள், தனியார் பணியில் வேலைபார்க்கும் ஆசிரியர்களை விட பன்மடங்கு ஈடுபாடுடனும், மாணாக்கர்கள் மீது அக்கரையுடனும் பணியாற்றுகிறார்கள். அதிகபட்ச அரசுப்பள்ளிகளில் காலை வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னறே சிறப்பு வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களை நான் பார்த்திருக்கிறேன்...

      Delete
    2. 1985 எனக்கு வகுப்பு எடுத்த திரு. நாகப்பன், தலைமை ஆசிரியர் அவர்கள் காலை 8 மணிக்கு வந்து பாடம் நடத்துவார். 9 மணிக்குத்தான் பிரேயர், 9.20 க்கு பள்ளி வேலை நேரம் துவங்கும். சீனியாரிட்டி படி வேலைக்கு வந்த அவர்களே அப்படி இருக்கும் பொழுது. தற்பொழுது உரிய தேர்வு எழுதி பணிக்கு வரும் ஆசிரியர்கள் முழு திறமையுடன் பணியாற்றுகிறார்கள் என்பதே என் கருத்து.

      Delete
  8. Tambi neenga govt school la part time la yum private school la full time wrk pannarada mudala nirutitu olunga strength adigam pannara valiya mattum paarunga

    ReplyDelete
  9. என்னுடைய ஆதங்கமும் அதேதான்!

    ReplyDelete
  10. மிகச்சாியான பதிவு நண்பரே....

    ReplyDelete
  11. முதலில் தனியாா் பள்ளியில் 25சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஆவணம் செய்ய வேண்டும்... அதற்காக அரசு வழங்கி வ௫ம் தொகையினைக் கொண்டு அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றிற்கு செலவிட்டாலே தானகவே அரசுப்பள்ளியின் தரம் உய௫ம்....

    ReplyDelete
  12. இந்த பதிவை பதிப்பித்த நன்பருக்கு வணக்கம்,

    கோபக்கனல் பரக்கும் உங்களின் வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் அனைத்தும் ரசிக்கும் படியாகவும், அரசு மீது உள்ள அவ நம்பிக்கையும் தெரிகிறது.

    உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் நீங்களே பதில் அளித்துள்ளீர்கள்... நல்லது வரவேற்க்கத்தக்கது.

    சில கேள்விகள் என்னுள் எழுத்தது, அது ஆசிரியர்களுக்கு மட்டுமானது மட்டுமல்ல பொதுவாக வசதிவாய்ப்புள்ளவர்கள், அசிரியர் அல்லாத அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள், மருத்துவர்கள்... அனைவர்களும் யோசிக்க வேண்டியது என நினைக்கிறேன்:


    நம்டைய அரசு இன்றிலிருந்து அரசு பள்ளியில் பயின்ற மாணாக்கர்களுக்கு மட்டுமே 90 சதவீத அரசுப்பணி வழங்கப்படும் என்ற சட்டம் இயற்றப்படுகிறது எனில் மேற்ச்சொன்னவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

    அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மட்மே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில சேர்த்துக்கொள்ளப்படும் என்றால் தங்களின் மன ஓட்டம் என்னவாக இருக்கும்?

    அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலைக்கழம், ஐஐடி, விவசாயப்பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் அட்மிசன் கிடைக்கும்படி அரசு முடிவு எடுத்தால் அப்போதும் நீங்கள் அரசுப் பள்ளிகளிள் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தவிர்த்துவிடுவீர்களா?

    பள்ளிகளில் உள்ள குறைகளை சுட்டிகாட்டு வது சரியானது, வரவேற்கிறேன். அனாலும் இதுநாள் வரை எங்கள் பள்ளியில் அல்லது அலுவலகத்தில் கழிப்பறை வசதியில்லை, போதுமான பெஞ்ச் டெஸ்க் இல்லை, .... என்று இதுநாள் வரை எங்கும் ஒரு கேள்வி கூட அரசை எதிர்த்து எழுப்பவில்லை?


    அனைத்து அரசுப்பள்ளிகளிலும் அட்மிசன் குறைவாக உள்ளது வருந்தத்தக்கது... அனைத்து அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், இன்னும் பிற.... நிரம்புகிறதே அது எப்படி, அங்கே அனைத்து வசதிவாய்ப்புகளும் உள்ளது என்று சொல்லிவிட முடியுமா?.... அதே போன்று அனைத்து வசதிகளுடன் கூடிய தனியார் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், இடிசி.. உள்ளன ஆனாலும் அவைகளுக்கு மேற்ச்சொன்னவர்கள் யாரும் முன்னுரிமை கொடுப்பதில்லையே அது ஏன்? அங்கே அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள் காரணம்?


    தனிப்பட்ட முறையில் நீங்களே சொல்லுங்கள்... நீங்கள் பன்னிரன்டாம் வகுப்புவரை உங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிரீர்கன் என வைத்துக்கொள்வோம் (தவறாகச் சொல்லவில்லை... எங்கு படிக்கவேண்டும் என முடிவு எடுப்பது பெற்றோர்களே இதில் மற்றவர்கள் தலையீடு எனக்கும் சுத்தமாக பிடிக்காது) ஏன் என்று கேட்டாள் அங்கேதான் சிறந்த கட்டிட வசதி, கழிவரை வசதி, பேருந்து வசதி, இசை வகுப்பு, நடன வகுப்பு, இன்னும் பிற... போன்ற சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்கிறீர்கள். சரி, தங்களின் பிள்ளையை மருத்துவம் சேர்க்கை விழைகிரீர்கள் என வைத்துக்கொள்வோம். இப்போதும் உங்களின் நிலைப்பாடு தணியார் மருத்துவ கல்லூரியை தேடுமா? அரசு மருத்துவக்கல்லூரியை தேடும? எங்கு சேர்க்க முன்னுரிமை கொடுப்பீர்கள்? உங்களின் கணிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

    உங்களின் பதில் இப்போதும் தனியார் மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்வேன் என்றால்... வெரிகுட் நீங்கள் தரத்தை மட்டுமே விரும்புகிறீர்கள் என்பதை நான் வரவேற்கிறேன் (ஏன் எனில் தாங்களே சான்று அளித்துள்ளீர்கள் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தரம் மற்றும் வசதிவாய்புகள் அனைத்து மிகச் சிறந்தவை என்று).

    உங்களின் பதில் இல்லை நான் அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்வேன் என்றால்... (இங்கேமட்டும் தரமான வசதிகள் உள்ளது என்று நம்புகிரீர்களா?) நான் பார்த்த வரையில் எந்த அரசு மருத்துவமணையிலும் சொல்லும்படியான வசதிவாய்ப்புகள் இல்லை. எந்த ஒரு மாமனிதர்களும் அங்கே மருத்துவம் பார்க்க செல்வதில்லை. எந்த எம்.எல்.ஏ, எம்.பி, முதலமைச்சர், டாக்டர், கலெக்டர்... இன்னும் பிற யாரும் அங்கே சென்று 1 நாள் பெட்டில் இருந்தது மருத்துவ ஆலோசனை பெற்றதாக சரித்திரம் இல்லை.... இப்படி எவ்வளவோ சொல்லலாம்


    இப்படி தரத்தையும், வசதிவாய்ப்புகளும் இருப்பதாளேயே தனியார் பள்ளியில் தன் குழந்தைகளை சேற்கிறொம் என்று சொல்லும் மாமனிதர்களே +2 க்கு அப்புரமும் தனியாரையே தேடுங்கள் பார்ப்போம்...
    படித்து முடித்தபின் தனியார் நிருவணங்களை தேர்வு செய்யுங்கள்...

    இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம் பதில் சொல்ல யோசிக்க வேண்டியிருக்கும்...

    நான் என்ன செய்ய வேண்டும் என்ததை நானே தீர்மானிப்பேன் என்பது வரவேற்புடையது...

    எக்காரணம் கொண்டும் அடுத்தவர் தலையீடை விரும்பமாட்டேன்.

    என்பதில் என்கும் உடன்பாடு உண்டு.

    உங்கள் தலைப்பைத் தவிற அனைத்தும் நன்றாக உள்ளது.

    தவறேனும் கூறியிருந்தால் மண்ணிக்கவும்

    நன்றி

    ReplyDelete
  13. NAN SOLLAVANTHATHA SAGOTHARAR IYYAPPA SIRAPAGA SOLLIVITAR NANRI

    ReplyDelete
  14. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்றால் தனியார் பள்ளிகள் திறக்க வேண்டுய அவசியம் என்ன? என்ற உங்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு நான் தரும் பதில் :

    நமது நாட்டில் எத்தனையோ செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், அரசு வேலை பார்க்க வேண்டிய அவசியம் அல்லாதவர்கள் அவர்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் அதிக பொருள் செலவு செய்து படிக்க வைக்கட்டும்.

    ஏன் எனில் அவர்களின் பிள்ளைகள் படித்து அரசு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை அவர்களின் பெற்றோர் செய்த பிஸ்னஸ் பாத்துக்கிட்டாலே போதும் எனும் நிலையில் உள்ளவர்கள் தனியார் பள்ளியில் பயிலட்டும்.

    பல கோடி கொடுத்தேனும் மருத்துவ சீட் வாங்கிவிட முடியும் என்பவர்களுக்கு அரசு வேலை அவசியம் இல்லை அவர்கள் தனியே ஹஸ்பிடலே உருவாக்கிவிடுவார்கள்.


    ஒருவேளை, அரசு வேலை, அரசாங்க கல்லூரியில் இடம், அரசாங்க சலுகைகள், அரசு பள்ளியில் பயின்றவருக்கு மட்டுமே என்ற அறிவிப்பு வந்தால் ....

    என் கணக்கு சரியானால் அனைத்து அரசு பணியிள் உள்ளவர்களின், எம்எல்எ, எம்பி, அமைச்சர், இடிசி., பிள்ளைகளும் அரசு பள்ளியில் பயிலும்... இலவசமாக.

    ஆனால்,
    பணம் கட்டி தனியாரில் பயிலும் ஏழையின் பிள்ளைகள்.

    எம்மைப் போன்ற ஏழைகளுக்கு அரசு பள்ளி எட்டாக்கணியாக மாறிவிடும்... (அரசு சி.பி.எஸ்.இ பள்ளிபோல) ?

    ReplyDelete
  15. EVERYTHING IS CORRECT BUT HOW TO CORRECT AND WHO IS GOING TO FILE CASE.

    ReplyDelete
  16. K sir.neenga solvathu 100% unmai. Govt school close pannitu private school mattum nadathalame. Neengalum private school job ku ponal coat die ellam podalame. Job resign pannuvingala???

    ReplyDelete
  17. Ungaluku salary pathalana mattum poraduringa... Aaluku oru sangam vachu poradurinha...... Govt school ku ella vasathium kettu porada vendiyathu thana......

    ReplyDelete
  18. Ungaluku salary pathalana mattum poraduringa... Aaluku oru sangam vachu poradurinha...... Govt school ku ella vasathium kettu porada vendiyathu thana......

    ReplyDelete
  19. K sir.neenga solvathu 100% unmai. Govt school close pannitu private school mattum nadathalame. Neengalum private school job ku ponal coat die ellam podalame. Job resign pannuvingala???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி