ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்வித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2018

ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்வித்துறை!

திருவள்ளூரில் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள், அவரை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சிகள் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆசிரியர் பகவான். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 5 வருடமாக அங்கு பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் ஆசிரியர் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இதனிடையே, ஆசிரியர் பகவான் இடமாறுதல் ஆக இருப்பது குறித்து தகவல் அறிந்த பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் சோகம் அடைந்தனர். சிறந்த ஆசிரியரான பகவான் எங்கள் பள்ளியை விட்டு மாறுதலாகி வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இடம் மாறுதலுக்கான கடிதத்தை வாங்கி செல்வதற்காக கடந்த 20ஆம் தேதி பள்ளி வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் இந்த பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் மாணவர்களை ஆழக்கூடாது என ஆறுதல் படுத்திவிட்டு, பள்ளியில் இருந்த ஆசிரியர் பகவான் வெளியே செல்ல முயன்றார். அப்போது மாணவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு அவரை கட்டிப்படித்து கதறி அழுது துடித்தனர். இதனால் ஆசிரியார் பகவானும் செய்வதறியாது கண்ணீர் விட்டு அழுதார்.

வெகுநேரமாக நடந்த இந்த பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த ஆசிரியர் பகவானும் கலங்கிய கண்களுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார். மாணவர்களின் இந்த பாசப்போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர். இதனால் ஆசிரியர் பகவான் பணிநிரவல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் பகவான் வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

35 comments:

  1. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தலை வணங்குகின்றேன் பகவான் Sir...

    ReplyDelete
  3. கல்வி துறைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. நீங்கள் செய்தது சாதனை,
    நீங்கள் போக இருந்தததோ மாணவர்களுக்கு வேதனை,
    நீங்கள் தான் ஹீரோ
    நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. கல்வி துறைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  6. BAGAVAN SIR, UNDOUBTEDLY YOU HAVE CREATED OTHER TEACHERS THINKING OF YOUR NATURE TOWARDS STUDENTS. IF IT IS SO TAMIL NADU IS THE BEST IN EDUCATION

    ReplyDelete
  7. Congratulations to the students.

    ReplyDelete
  8. கல்வித் துறைக்கு மனமார்ந்த பாராட்டுகள்...

    ReplyDelete
  9. Replies
    1. bhagavane Palli karunai school-ai vittu sella vendam. Thank you for Tamil nadu School education. Acted favour of school students as fastly cancelled Transfer order English Master Bhagavan.

      Delete
  10. பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Done good job kalvithurai, congrats

    ReplyDelete
  13. அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தரத்திற்கு ஒரு சான்று திரு பகவான் அவர்கள் 👍👍

    ReplyDelete
  14. Education is Empower......Hearty wishes.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் தோழா.....👍👍👍

    ReplyDelete
  16. Engda eppai usppu ethirunga

    ReplyDelete
  17. தலை வணங்குகிறேன் சகோதரா........

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் பகவான் ஆசிரியரே.

    ReplyDelete
  19. மேலும் நன் மாணாக்கர் பலரை உருவாக்க சக ஆசிரியனாக வாழ்த்துகள்

    ReplyDelete
  20. avaru 5 varusam velai seithara therinjukkitu news podunga sir

    ReplyDelete
  21. it is example for govt school

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி