ஓய்வூதியத்தை உயர்த்த முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2018

ஓய்வூதியத்தை உயர்த்த முடிவு

அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும், மாதாந்திர ஓய்வூதிய தொகையை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கடந்த, 2015ம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும், ஓய்வூதியம் பெறும் வகையில், அடல் ஓய்வூதிய திட்டம் துவங்கப்பட்டது. இதில், 18 - 40 வயதுடையவர்கள், மாதம் தோறும், குறைந்த பட்சம், 42 ரூபாயை, 20 ஆண்டுகள் செலுத்தினால், 60வது வயது முதல்,இறப்பு வரை, 1,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும்.மற்றவர்களுக்கு, செலுத்திய தொகைக்கேற்ப, அதிகபட்சமாக, 5,000 ரூபாய் வரை, ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 20 - 30 ஆண்டுகளுக்கு பின், 5,000 ரூபாய் ஓய்வூதியம் போதாது என்பதால், ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஓய்வூதிய தொகையை, அதிகபட்சமான, 5,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாகவும், இத்திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்ச வயதை, 50 ஆகவும் உயர்த்த, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வரைவு மசோதா, நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி