அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள்:அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2018

அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள்:அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்களை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபி அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டகாமாட்சி நகரில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு வாரத்தில் அனைவருக்கும் பாடப் புத்தகங்கள் வழங்குவதற்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 32 மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 16 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 32 மாவட்ட நூலகங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி அகாதெமி தொடங்கப்படும். ஜெர்மன், பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து 600 பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆறு மாதங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அரசு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. சிபிஎஸ்இ பாடத்துக்கு இணையாகவும், நீட் தேர்வுக்குத் தேவையான 40 சதவீத வினாக்கள் இருப்பதாலும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் 11ஆம் வகுப்பு புத்தகங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.ஒரு வாரத்துக்குள் 10 கவுன்ட்டர்கள் அமைத்து அனைவருக்கும் பாடப் புத்தகம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காகிதம், அச்சு உள்ளிட்ட செலவுகளைக் கணக்கில் கொண்டு விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாடத் திட்டம் மாற்றம், பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைப் பார்த்த மத்திய அரசுக் குழுவினர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர் என்றார்.விழாவில், அரசு நலத்திட்ட உதவியை பெண் பயனாளி ஒருவருக்கு வழங்குகிறார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி