மின்னலை செல்போனில் படம் பிடித்தவருக்கு உயிரே போனது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2018

மின்னலை செல்போனில் படம் பிடித்தவருக்கு உயிரே போனது

திருவள்ளூரில் மின்னலை செல்போனில் படம் பிடித்தவர் கதிர்வீச்சின் ஈர்ப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வந்தது.
மதியம் 3 மணிக்கு மேல் வானிலை மாற்றம் அடைந்து, மாலையில் மழை பெய்தது. புழல், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்தக் கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.சென்னை திருவான்மியூரை சேர்ந்த ரமேஷ், துரைப்பாக்கத்தில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கனமழை பெய்யும் நேரத்தில் இவர், தனது நண்பர்களுடன் சுண்ணாம்பு குளம் பகுதியில் இறால் பண்ணையை பார்வையிட சென்றுள்ளார். அப்போது, அங்கு இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.

மின்னலை கண்டரமேஷ், அதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.அப்போது செல்போனின் கதிர்வீச்சால் இழுக்கப்பட்ட மின்னல், ரமேஷின் முகம் மற்றும் மார்பில் தாக்கியுள்ளது. இதில் கருகியதும், பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஆரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, ரமேஷ் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி