அதிக சாரண, சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாமிடம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2018

அதிக சாரண, சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாமிடம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

அதிக சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களின்பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்திருப்பதாகஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்தார்.
2016, 2017 -ஆம் ஆண்டுகளுக்கான தகுதிபெற்ற சாரண-சாரணியர்களுக்கு மாநிலத்தின் உயரிய விருதான ராஜ்ய புரஸ்கார்' விருது வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் 670 சாரண, சாரணியர்களுக்கு ஆளுநர் நேரடியாக விருதுகளை வழங்கினார்.இவர்களுடன் சேர்த்து மொத்தம் 34,562 பேர் தகுதி பெற்றனர்.விழாவில் ஆளுநர் பேசியதாவது:நாடு முழுவதும் 57 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட சாரண சாரணியர் இயக்கம், இன்றைக்கு மிகச் சிறந்த சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய வளமாகத் திகழ்கிறது.

தமிழகத்தில் 1,76,812 சாரணர், 1,02,192 சாரணியர் என மொத்தம் 2,79,004 உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக உள்ளது.இதன் மூலம், அதிக சாரண சாரணியர் உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.பிரதமரின் தூய்மை இந்தியா' இயக்கத்தில் சாரண சாரணியர் இயக்கம் மிகப் பெரும் பங்காற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது.

மாணவர்கள் தங்களின் லட்சியத்தை அடையவும், நற்பண்புகள் மூலம் சமூகத் தொண்டாற்றவும் இந்த இயக்கம் மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வலிமை தரும் என்றார் அவர்.

விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், சாரண சாரணியர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பி.மணி, பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி