அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடுக்க தற்காலிக ஆசிரியர்கள் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2018

அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடுக்க தற்காலிக ஆசிரியர்கள் !

அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், வகுப்பெடுக்க போதிய கணினி ஆசிரியர் இன்றி மாணவர்கள் பாதிக்கின்றனர் என, ஆசிரியர் சங்கங்கள் புகார் கூறுகிறது.
தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வால் பள்ளிக் கல்வியில் சில மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இவ்வாண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வானது. நுழைவுத் தேர்வுகளை அரசுபள்ளி மாணவர்களுக்கு எதிர்கொள்ளும் நோக்கில் 11-ம் வகுப்பு பாடத்திட்டமும் மாற்றப்பட்டது. புத்தகங்களை முழுமையாக படித்து தேர்வெழுத ஒவ்வொரு பாடத்திற்கும் 800 முதல் 1500 பக்கங்கள் அடங்கிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறித்த நாளுக்குள் யூனிட் அடிப்படையில்கற்பிப்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் கிடைக்காத சூழல் உள்ளது என, புகார் எழுந்துள்ளது. அதிக பக்கங்களை படித்தாலும் நீட் தேர்வால் மருத்துவ கனவை எட்டமுடியுமா என்ற தயக்கத்தில் அரசு பள்ளிகளில் கலைப் பாடப்பிரிவில் சேர ஆர்வம் காட்டிஉள்ளனர்.மேல்நிலை கல்வியில் அறிவியல் பிரிவில் மட்டும் இருந்த கணினி வகுப்பு இம்முறை அனைத்துப் பிரிவிலும் கணினி பாடத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான கணினி ஆசிரியர்களைநியமிக்கவில்லை என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சிவகங்கை இளங்கோவன் கூறியது:“அரசு பள்ளிக் கல்வியில் சீர்த்திருத்தங்களை வரவேற்கிறோம். புதிய பாடத்திட்டத்தின்படி, 11-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் 1000 முதல் 1500 பக்கங்கள் இடம் பெறுகின்றன. இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். இதை அவர்களிடம் திணிப்பதால் கல்வித்தரம் உயர்வு, மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு செய்தால் விவரம் தெரியும்.இவ்வாண்டு 11 ஆம் வகுப்பில் குரூப்-1, பயோ சயின்ஸ் பிரிவுகளில் சேர்க்கை குறைந்துள்ளது. கலைப் பிரிவுகளில் அதிகம் சேர்ந்துள்ளனர். பத்தாம் தேர்ச்சி பெற்றவர்கள் 20 சதவீதம் பேர் 11-ம் வகுப்பில் சேர தயங்கி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டைவிட 30 சதவீத மாணவர்கள் கலைப்பாட பிரிவுகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.அதிக பக்கங்களை படிப்பது, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்வது என்ற தயக்கம் உள்ளது. ஒருவேளை நீட் தேர்விலும் தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் மாணவர், பெற்றோர் மத்தியில் உள்ளது. அறிவியல் பாடங்களில் 70 மதிப் பெண்ணுக்கு 1200 பக்கமும், கணிதம் 90 மதிப்பெண்ணுக்கு 2 வால்யூம் கொண்ட800 பக்கங்களை படிக்க வேண்டும்.முதல் வகுப்பில் இருத்தே மாணவர்களை தயார்படுத்தி இருந்தால் சாத்தியம். இதுபோன்ற சூழலில் அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை குறைவை காரணம் காட்டி, உபரி என, ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு மாற்ற கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.கணினி ஆசிரியர்களுக்கு பணிமாறுதலான காலியிடத்திற்கு பதில் ஆசிரியர்கள் நியமிக்கமில்லை. மாநிலம் முழுவதும் 2,570 மேல்நிலைப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மாற்று ஏற்பாட்டில் இருந்த கணினி ஆசிரியர்களை நிறுத்திவிட்டனர். மேல்நிலை கல்வியில் அனைத்துப் பாடப்பிரிவிலும் கணினி வகுப்பு கட்டாயம் என, அறிவித்துவிட்டு, அதற்கான ஆசிரியர்கள் நியமனமின்றி எப்படி வகுப்பெடுக்க முடியும்.இதை அறிந்த பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தரமான கல்வி என்ற உத்தரவு இருந்தும், புதிய பாடப் புத்தகங்கள் சப்ளை இன்றி, எப்படி பாடம் நடத்துவது என்ற கேள்வி எழுகிறது. சரியான திட்டமிடல் இன்றி, ஆசிரியர்கள் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது பள்ளிக் கல்வித்துறை.பயோ மெட்ரிக் வருகைப் பதிவு என, அறிவித்துவிட்டு தயக்கம் ஏன்?புளூபிரண்ட் இன்றி புத்தகத்திற்குள் இருந்து மட்டுமே வினாக்களுக்கு பதிலளிக்கும் முறை கிராமப்புற மாணவர்களை மறைமுகமாக தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் செயல்” என்றார்.கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பள்ளிகள் துவங்கிய 2 வாரம் மட்டும் 11-ம் வகுப்பு புத்தகம் வர தாமதம் இருந்தது. ஆன்லைனில் அதற்கான பாடத்திட்டத்தை பார்த்து பாடமெடுக்க அறிவுறுத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைத்துள்ளது. கணினி வகுப்பெடுக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

19 comments:

  1. கணினி ஆசிரியர்களின் வேலைவாய்பைக் கேள்விக்குறியாக்கி......
    ஏன்டா படித்தோம் பேசாம பக்கோடாகடையோ அல்லது டீகடையோபோட்டு இருக்கலாம் என்ற நிலைக்கு தள்ளிய
    கையோடு தற்போது
    கணினி பாடப்பிரிவில் சேர்ந்தமாணவர்களின் நிலையை எண்ணும்
    போது பாவமாகும் பயமாகவும் உள்ளது..
    கொஞ்சம் யாவது மனசாட்சி யுடன் நடந்துகொள்ளுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. M. Sc, B. Ed mudichitu vela illa ma veetla irukom sir. IPA ellame systamize but computer padi hava kal uku vela illa sir. Computer padichavankala rmba kevalama pakuranka sir.

      Delete
    2. விடுங்க சார் நமுடிவுக்கம் எல்லாம் இவங்கள சும்மா விடாது....
      தமிழ்நாட்டில் இனி ஆட்சிய கனவுலகில் கூட பிடிக்க முடியாது....
      Digital India என்று மார்தட்டிக் கொள்ளும் மத்திய அரசும் மாநில அரசை ஏன் பள்ளிக்கல்வியில் கணினியை கட்டாயம் ஆக்கவில்லையென்று கேள்வி கேட்காது....
      அதேபோல் மாநில அரசும் காசு, வருமானம் இருந்தால் தான் அரசுப்பள்ளியில்கணினிகொண்டுவருவோம் என்ற
      "அரசின் கொள்கை முடிவு" செயல்படுத்தி வருகிறது....
      மத்தியும் மாநில த்தைகேட்காது
      மாநிலமும் செயல்படுத்த முயற்சிக்காது....
      இனி இருவரும் எங்குமே ஆட்சி இல்லை உள்ளாட்சி யைக்கூட பிடிக்க முடியாது....
      ஏனெனில்
      50,000கணினி ஆசிரியர்களின் வைத்தெரிச்சல் இருவரையும் ஆழித்துவிடும்....
      ஆமாம் சாபம் தான்....

      Delete

  2. TNPSC Result 2018 will available on July 2018 by online official website, Tamil Nadu Public Service Commission will release TNPSC VAO Result 2018 by official web page. Check TNPSC Group IV Cut off Marks 2018.

    ReplyDelete
  3. Pg trb varuma varatha.govt opena sollunga.ennai pol 2 markil thavara vittavargal antha exama nambi than ennumum velaikku pogama padithukittu erukkanga

    ReplyDelete
  4. wait for 2 and half years...entha aachi mudivukku varum...wait cs makkale...don't feel bright future is there...

    ReplyDelete
  5. Nanbargale kandipa pg Trb undu. Nan 6 yrs wait panni ipathan posting ponen. Nan 2time cv poi date of birthla veliya vandhen irundhalum confidenta padichu achieve paniten so padichute irunga. All the best

    ReplyDelete
    Replies
    1. Neenga epdi posting vaangineenga entha exam la nu sollunga pls

      Delete
    2. I am commerce. Last time i failed by 3 marks

      Delete
    3. I am also commerce. My number 9842891676

      Delete
    4. Psychology education lam epadi padicinga athula than mark varamaduku

      Delete
    5. Psychology education lam epadi padicinga athula than mark varamaduku

      Delete
    6. Last time kettathu doctor psychology

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி