பள்ளிகள் தரம் உயர்வு: மக்கள் பங்களிப்புத் தொகையை விலக்க திமுக கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2018

பள்ளிகள் தரம் உயர்வு: மக்கள் பங்களிப்புத் தொகையை விலக்க திமுக கோரிக்கை

பள்ளிகளின் தரம் உயர்வுக்காக பொது மக்களிடம் இருந்துபெறப்படும் பங்களிப்புத் தொகையை விலக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கை தொடர்பாக, முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளித்தார்.சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து நடந்த விவாதம்:-

பூங்கோதை (திமுக): தமிழகத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. எனவே, ஆங்கிலமும் தமிழும் கலந்து போதிக்கும் இருமொழி கற்றல் வகுப்புகளை சோதனை அடிப்படையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: ஆங்கில வழியிலான தொடக்கப் பள்ளிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சமூக நலத் துறை அமைச்சருடன் கலந்து பேசி ஆய்வு செய்து வருகிறோம்.

தங்கம் தென்னரசு (திமுக): பள்ளிகளைத் தரம் உயர்த்தும் போது, பொது மக்களின் பங்களிப்பாக நிதி கோரப்படுகிறது. குறிப்பாக, நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த ரூ.1 லட்சமும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த ரூ.2 லட்சமும் பொது மக்களின் பங்களிப்பாகக் கோரப்படுகிறது.ஆனால், இப்போது அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் போன்ற திட்டங்களின் வழியாக மாநில அரசுகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகளவு இருக்கும்போது பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்காகப் பொது மக்களின் பங்களிப்பாக நிதி வசூலிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.அரசு சார்பில் நிதி கோரப்படும் போது, அதனைச் சேகரிப்பதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே, பள்ளிகள் தரம் உயர்வுக்கு பொது மக்களின் பங்களிப்பாக நிதி வழங்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: பொது மக்களிடம் இருந்து பெறப்படும் நிதியானது, புதிய கட்டடங்கள், இருக்கைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், உறுப்பினரின் கோரிக்கை சரியான கருத்து. இது தொடர்பாக, முதல்வர், துணை முதல்வரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

2 comments:

  1. Flash News.

    06/06/2018 இன்றையதினம் சட்டசபையில் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது விவாதம் நடைபெறுகிறது.

    இவண்
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
    இளங்கோவன்
    8778229465
    வடிவேல்சுந்தர்
    8012776142

    ReplyDelete
    Replies
    1. முட்டாளே.. தி மு க என்ன கேட்டது என்று தெரியாமல் உலறிக்கொண்டு தெரியாதே. திரு. செங்கோட்டையன் என்ன கூறினார் என்பதை தெரிந்து இனிமேலாவது உருப்படும் வழியை பாருங்கள் 2013 முன்னுரிமை கும்பலே.

      சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்று காலிப்பணியிடத்துக்கேற்ப தரவரிசை பட்டியலில் இடம்பெற்றால்தான் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.


      இதில் 2013 முன்னுரிமை என்று கேட்டார்களா.. நீங்கள் எப்போது தேர்ச்சி பெற்றாலும் தகுதி தேர்வு, வெயிட்டேஜ், இன சுழற்சியில் இடம் பெற்றால் மட்டுமே பணி வழங்கப்படும் என்று இப்போதும் கூறி விட்டார். இது புரிஞ்சாலும் புரியாத மாறியே நடிப்பாங்க அறிவிலிகள்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி