`நான் ரீல் ஹீரோதான்... நீங்கதான் ரியல் ஹீரோ!’ - ஆசிரியர் பகவானுக்கு சமுத்திரக்கனி பாராட்டு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2018

`நான் ரீல் ஹீரோதான்... நீங்கதான் ரியல் ஹீரோ!’ - ஆசிரியர் பகவானுக்கு சமுத்திரக்கனி பாராட்டு!

மாணவர்களின் நண்பனாகவும் நல்லாசிரியராகவும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் சிறப்பாகச் சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆசிரியர்களுக்கான பொது மாறுதலில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பகவானின் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது தவிர பள்ளியைப் பூட்டி போராட்டமும் நடத்தினார்கள். அந்த நேரம் பள்ளிக்கு வந்த பகவானை, மாணவர்கள் கட்டிப்பிடித்து அழுதனர்.

இந்தச் செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து நாடு முழுவதும் ஆசிரியர் பகவானுக்கு நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி பகவானை செல்போனில் அழைத்து வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார். `மாணவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுங்கள். நான் சாட்டை படத்தின் ரீல் ஹீரோதான்; நீங்கள்தான் ரியல் ஹீரோ. உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். சமுத்திரக்கனியின் பாராட்டால் உள்ளம் நெகிழ்ந்து இருக்கிறார் பகவான்.

அடுத்த சில வினாடிகளில் தனது செல்போனுக்கு வந்த இன்ப அதிர்ச்சி ஹலோ என்றதும் மறு முனையில் நான் வைகோ பேசுகிறேன் என்றவுடன் நெகிழ்ச்சியில் உடைந்து போனார் பகவான். தனது வானளாவிய பாராட்டுக்களைத் தெரிவித்த வைகோவின் நம்பிக்கை வார்த்தைகளில் உள்ளம் நெகிழ்ந்து போனார் பகவான். வைகோவின் பண்பையும் அரசியல் நாகரீகத்தையும் கண்டு வியந்து போனேன் என்று தெரிவித்தார் பகவான். வைகோவின் வாழ்த்து வியந்து நிற்கிறார் பகவான்.

வெளியகரம் திருவள்ளூர் மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதி. வெளியகரம் ஒரு சிறிய கிராமம். இந்தக் குக்கிராமத்தில் தெலுங்கு தான் தாய் மொழி. இந்த ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 280 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் ஆங்கில பாடத்தின் ஆசிரியராக பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜிப்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பி.எட் படித்த 28 வயது பகவான் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்குச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் மாணவர்களிடம் ஆசிரியராக இல்லாமல் பள்ளித் தோழனாகவே பாடம் நடத்தி வருகிறார்.

ஆங்கிலப் பாடத்தில் அதிக நாட்டம் இல்லாத மாணவர்கள் ஆசிரியர் பகவான் பாடம் நடத்தும் முறையை கண்டு வியந்து, ஆர்வத்துடன் படித்தனர். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் ஆங்கிலப் பாடம் கற்றுத்தரும் முறையைக் கண்டு விரும்பி படிக்க ஆரம்பித்தனர். நண்பனாக விளங்குகிற ஆசிரியர் பகவானை இடமாற்றம் செய்ய கூடாது என்று தலைமையாசிரியர் அரவிந்திடம் மாணவர்களின் பெற்றோர்கள் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் பகவானுக்கு வழங்கப்பட்ட உத்தரவைத் திரும்ப பெற முடியாது என்றார்.

மேலும் அவர், 'அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறி, அவருக்கு வழங்கப்பட்ட புதிய பள்ளிக்கு பணி மாறுதலாகி செல்வது அவருடைய விருப்பம்' என்று தெரிவித்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி பகவானுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகள் தெரிவித்தார். திங்கள்கிழமை தன்னுடைய அலுவலகம் வந்து தன்னை நேரில் சந்திக்கும் படி கூறியுள்ளார். அன்று பகவானுக்கு விருது வழங்கப்படும் என தெரிகிறது.

58 comments:

  1. பகவான் சார்.வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தலைவா..

    ReplyDelete
  3. உங்கள் சேவையில் என் மனம் நெகிழ்கிறது சார்...

    ReplyDelete
  4. மாதா பிதா விற்கு அடுத்து குரு -ன்னு
    சொல்வார்கள் அதை நான் இங்கு
    கண்டேன் சார் வாழ்க வளர்க...

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. பகவான் சார் வாழ்துக்கள்

    ReplyDelete
  7. entha kalathuleyum eppadi oru Asiriyar kidaikka antha palli koodhu vaithurukka vendum. valka valamudan.

    ReplyDelete
    Replies
    1. Entha kalathuleyum eppadi oru Asiriyar kidaikka antha Govt. School koodhu vaithurukka vendum. valka valamudan.

      Delete
  8. நேரில் வந்த பகவான் அவர்��❤��������

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Very rarest kind of teachers in the indian society.wishes from my heart and hope that all teachers follow your path for the better nation

    ReplyDelete
  11. Teacher power proof panittenga sir bhagavaan sir phone no. Iruntha nalla irukkum

    ReplyDelete
  12. Teacher power proof panittenga sir bhagavaan sir phone no. Iruntha nalla irukkum

    ReplyDelete
  13. Thw top most salary teacherukku than. Inga illappa pinland la

    ReplyDelete
  14. Thw top most salary teacherukku than. Inga illappa pinland la

    ReplyDelete
  15. தோழர் பகவானுக்கு வாழ்த்துக்கள்... பல்வேறு சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  16. வாத்துக்கள் பகவான் சார்

    ReplyDelete
  17. நான் எல்லாம் வேலைய ரிசைன் பண்ண அப்போ ரொம்ப சந்தோசபட்டது என்னோட கிளாஸ் பசங்க தான், ஆனா எவனும் வெளில காட்டிக்கல, சனியன் போனா சரின்னு விட்டுடானனுங்க, ஒரு வருஷம் வெச்சு டார்ச்சர் பண்ணேன் அவனுங்கள, ஆனா அது அவங்களோட நன்மைக்குன்னு ஒருநாள் புரிஞ்சிக்குவாங்க,

    ReplyDelete
  18. ஆசிர்யர்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி. வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  19. ஆசிர்யர்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி. வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  20. Congratulations sir. No wood for your selfless services towards your job. Keep it up.

    ReplyDelete
  21. Engal mannin mainthan valthugal.

    ReplyDelete
  22. Super teacher.valthukal sir.you are real Hero.salute sir

    ReplyDelete
  23. பகவானின் அற்பணிப்புக்குக் கிடைத்த பரிசு.
    நண்பனுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. Vanakum sir wish you all the best

    ReplyDelete
  25. Your truely bahavaaann brother

    ReplyDelete
  26. Solute sir.... Real hero neengathaan sir.....

    ReplyDelete
  27. Solute sir.... Real hero neengathaan sir.....

    ReplyDelete
  28. vanakkam, Congratulations sir.

    ReplyDelete
  29. அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இப்படி இருப்பதில்லை நீங்கள் மாறுபட்டு இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் அரசு பள்ளிகள் மீது பொது மக்களுக்கு என்றைக்கு முழு நம்பிக்கை இருக்கிறதோ அன்றைக்கு தான் அரசு பள்ளிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்

    ReplyDelete
  30. அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இப்படி இருப்பதில்லை நீங்கள் மாறுபட்டு இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் அரசு பள்ளிகள் மீது பொது மக்களுக்கு என்றைக்கு முழு நம்பிக்கை இருக்கிறதோ அன்றைக்கு தான் அரசு பள்ளிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்

    ReplyDelete
    Replies
    1. அனைத்து ஆசிரியர்களும் அப்படி தான் நீங்க முதலில் திருந்தி அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கவும்

      Delete
    2. அனைத்து ஆசிரியர்களும் அப்படி தான் நீங்க முதலில் திருந்தி அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கவும்

      Delete
  31. Keep up the good work .. ..God bless you

    ReplyDelete
  32. Replies
    1. God bless you bhahavan sir

      Delete
    2. God bless you bhahavan sir

      Delete
    3. வாழ்த்துக்கள் நண்பரே...

      தங்களின் அர்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்....👋👋👋🙏


      தங்களை போல் அரசு பள்ளி ஆசிரியர் அனைவரும் இருந்து விட்டால் தனியார் பள்ளிகளுக்கு அவசியமேது...⚡🤔⚡



      Delete
  33. ஒவ்வொரு ஆசிரியரும் இந்த நண்பரை போல பணியாற்றினால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் நண்பரே. வளர்க உன் தொண்டு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி