அரசு பள்ளி மாணவர்களுக்கு மெட்ரோ ரயில்வே சார்பில் இலவச கல்வி சுற்றுலா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2018

அரசு பள்ளி மாணவர்களுக்கு மெட்ரோ ரயில்வே சார்பில் இலவச கல்வி சுற்றுலா

மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்ட்ரல்- விமான நிலையம், டி.எம்.எஸ் விமான நிலையம் வரையில் அரசுபள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மெட்ரோ ரயிலின் கட்டமைப்பு, வசதிகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் அரசு பள்ளி மற்றும் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகளை இலவசமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இதைமெட்ரோ ரயில் நிர்வாகமே ஏற்பாடு செய்யும். இந்நிலையில், 2018-19ம் கல்வி ஆண்டிற்கான கல்வி சுற்றுலா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கல்வி சுற்றுலாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்ட்ரல்-விமான நிலையம், டி.எம்.எஸ்-விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மெட்ரோ ரயில் அதிகாரிகள், மாணவர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம்மற்றும் மெட்ரோ ரயிலின் அமைப்பு, சிறப்பம்சம், மெட்ரோ ரயில் செல்லும் வேகம் ஆகியவற்றை தெளிவாக எடுத்துக்கூறினர்.

1 comment:

  1. ⚫⚫⚫⚫⚫⚫⚫
    முக்கிய அறிவிப்பு!

    போராட்டம் ரத்து.....

    25/06/2018 சென்னயைில் திட்டமிட்ட போராட்டத்திற்கு, காவல்துறையினரின் அனுமதி கிடைக்காததால்
    அன்றைய தினம் நடக்கவிருந்த போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யபடுகிறது.

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி