CTET - ஆசிரியர் தகுதி தேர்வு தமிழிலும் நடக்கும் : சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் முற்றுப்புள்ளி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2018

CTET - ஆசிரியர் தகுதி தேர்வு தமிழிலும் நடக்கும் : சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் முற்றுப்புள்ளி!

தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும், ஏற்கனவே இருந்ததுபோல, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்' என, மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு, இதுவரை, தமிழ் உட்பட, 20 மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்த ஆசிரியர் தகுதி தேர்வை, நான்கு மாதங்களில் நடத்த வேண்டுமென, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இதையடுத்து, இந்த தேர்வை நடத்தும், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., ஹிந்தி உட்பட, மூன்று மொழிகளில் மட்டும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மாராத்தி உட்பட, 17 மொழிகளிலும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முறை, இந்த மொழிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, மூன்று மொழிகளில் மட்டும் தேர்வு நடத்தப்படுவதற்கு, பல்வேறுதரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறியதாவது: இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட சவால். தமிழை தாய் மொழியாக கொண்டுள்ள, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், உரியஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், கடுமையான நெருக்கடிக்கு ஆளாவர். ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவர். இது, மொழிப்போராட்டத்தை தீவிரப்படுத்தவே, வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

 இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து, நேற்று டில்லியில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
டில்லி உயர் நீதிமன்ற், நான்கு மாதங்களுக்குள் தேர்வை நடத்த உத்தரவிட்டதன் காரணமாகவே, மூன்று மொழிகளில் தேர்வு நடத்துவது என, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது.

இருப்பினும், மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ் உட்பட, 20 மொழிகளிலும் நடத்தப்படும். இது குறித்து, உரிய உத்தரவு, சி.பி.எஸ்.இ.,க்கு பிறப்பிக்கப்பட்டு விட்டது. இந்த விஷயத்தில், தேவையற்ற எந்த குழப்பங்களும் வேண்டாம். தற்போது, 20 மொழிகளிலும், தேர்வுகளை நடத்த வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர் என்றால், வேறு பேச்சுக்கே இடமில்லை. நிச்சயம், 20 மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

4 comments:

  1. அது எப்படி சர்ச்சையை ஏற்படுத்தி ஆழம் பார்த்து விட்டு மத்திய அரசு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி........
    சூப்பர் ஜு, சூப்பர்....
    ஒரே தேசம் ஒரேமொழி மொழி என்ற கொள்கையை தற்போது ஆண்டு கொண்டு இருக்கும் அரசு ஐ வழுக்கட்டா யமாக திணிப்பு செய்யும் முறை களைந்தான் மாற்றி உள்ளது.....
    இதற்கு முன் ஆண்ட மத்திய அரசுின் மொழி திணிப்பு கொள்கை யின் பயனை அவர்கள் கண்கூடாக பார்த்து ம் எப்படியாவது கல்வியில் திணிக்கும் வரை இருவரும் ஒயமாட்டார்கள் இது உறுதி....

    ReplyDelete
    Replies
    1. 🔥🔥🔥🔥🔥🔥🔥
      விளக்க அறிவிப்பு :
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களது கூட்டமைப்பானது இதுவரை பலகட்ட போராட்டங்களையும், பல்வேறு தலைவர்களையும் சந்தித்து 2013 TET என்பதை உயிர்பெற செய்துள்ளோம். மேலும் பலகட்ட போராட்டங்களை நடத்தினாலும்அதுகவன ஈர்ப்பு போராட்டமாக மட்டுமே செய்துள்ளோம். ஆளும் அரசுக்குஎதிராக களம்கண்டதில்லை.

      வெயிட்டேஜ் முறை:
      எம் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் முதல் உறுப்பினர் வரை வெயிட்டேஜால் பாதிக்கபட்டவர்கள் உண்டு. வெயிட்டேஜால் பலன் பெறுபவர்களும் உண்டு. எனவே எம் அமைப்பு இதுவரை வெயிட்டேஜிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ குரல் கொடுத்ததில்லை. கொடுக்கவும் கொடுக்காது. மேலும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் எம் கூட்டமைப்பில் சம பலத்தில், நிர்வாகிகளாகவும் உள்ளனர். எனவே எங்களிடையே 90+ & 90- என்ற வேறுபாடு கிடையாது.

      முதலில் தேர்ச்சி பெற்றோருக்கு முதலில் பணி ( முன்னுரிமை)

      வெயிட்டேஜ் தொடர்ந்தாலும் சரி, வெயிட்டேஜை மாற்றி அமைத்தாலும் சரி , எந்த முறையை பின்பற்றினாலும் தற்போது தேர்ச்சி அடைந்தவர்களுக்கே வாய்ப்பு ! 2013 க்கு மிகப்பெரிய கேள்வி குறியே? எனவே எங்களது ஒற்றை கோரிக்கை பாதிக்கபட்ட
      2013 ல் தேர்ச்சி பெற்றோருக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்கவேண்டும் என்பது மட்டுமே!

      அனைவருக்கும் தீர்வு:
      ஆசிரியர் தகுதிதேர்வை பொருத்த மட்டில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் யாராலும் சரியான தீர்வை தர இயலாது என்பதே உண்மையிலும் உண்மை. எந்த முறையானாலும் ஒருசாராருக்கு பாதிப்பே!

      இறுதிநிலை"தொகுப்பூதியம்"
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் தற்போது பாதிக்கபடவில்லை. தேர்ச்சிபெற்று பாதிக்கபட்டோர் பெறும்பான்மையானோர் Group 4, Group 2, இடைநிலை ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளிகளில் 20,000 க்கும் அதிகமாக ஊதியம் பெற்று வருகின்றனர். எந்த வேலையும் இல்லாமல் அடிப்படைவாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள் சிலரே!
      " பள்ளிகளில் காலி பணியிடம் குறைவு" "அரசின் நிதிபற்றாக்குறை " இதை கவனத்தில் கொண்டு 10,000 மாத சம்பளத்தில் அரசுபள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தவர்களை மட்டுமே இணைத்து எம் கூட்டமைப்பின் சார்பாக வருகிற 25/06/2018 அன்று சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம்.

      குறிப்பு:
      தொகுப்பூதிய நியமனம் குறித்து இரண்டுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மேலும் தொகுப்பூதிய நியமன முறைக்கு தேர்வர் பெற்ற வெயிட்டேஜோ அல்லது அவர் பெற்ற மதிப்பெண்ணோ கணக்கில் கொள்ளபடாது. 82 ஆயினும் 102 ஆயினும் பாதிக்கபட்டோர் என்ற ஒரே நிலைதான்.
      25:06:2018 அன்றையதினம் சென்னையில் களம் காணும் பாதிக்கபட்ட ஆசிரியர்களிடம் தனியே தொகுப்பூதிய ஒப்புதல் கடிதம் பெற்று அரசிடம் சமர்பிக்கப்படும்.

      போராட்ட நாள்
      25/06/2018
      சென்னை

      💥💥💥💥💥💥💥💥💥💥
      இவண்
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

      இளங்கோவன்
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      8778229465


      வடிவேல்சுந்தர்
      மாநில தலைவர்
      8012776142

      சிவக்குமார்
      மாநில செயலாளர்
      ( ஊடகபிரிவு)
      9626580103

      உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

      Delete
  2. தெளிவாக போடவும்
    மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஆங்கிலத்தில் தான் வினாத்தாள் இருக்கும்
    மொழிபாடமான தமிழில் மட்டும் 30கேள்வி இடம் பெறும் ஆங்கில மொழிபாடத்தில்ஸ30 வினாக்கள் இருக்கும்
    மற்ற அனைத்து வினாக்கள் அதாவது அவரவர் படித்த பாடத்தில் இருக்கும் வினாக்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்
    நீங்கள் பதிவிட்டது தமிழில் தேர்வு எழுதலாம் என்று வதந்தியை கிளப்பாதீர்

    ReplyDelete
  3. ஆசிரியர் பற்றாக்குறை இல்லை என ஏற்கனவே அரசு மறைமுகமாக அறிவித்துவிட்டது. எனவே டிஇடி நடத்துவது, புது நியமனம் என எதுமே இப்போதைக்கு நடைப்பெற போவதில்லை என்பது திட்டவட்டமாகியுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் முடிவுகள் அவ்வப்போது தான் எடுக்கப்படும், தொகுப்பூதியத்தில் பணி என்பது நல்ல சிந்தனை ஆனால் ஏற்கனவே பணிநிரவல், பணியிட மாறுதல் போன்ற பிரச்சனைகளின் மூலம் கல்வித்துறை திணறிக்கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கையில் 2013 மற்றும் 2017க்கான பணியிடம் தொகுப்பூதியமோ அல்லது காலமுறை ஊதியமோ அளிக்கப்பட்டால் அதற்கான அரசானை வெளியிடப்பட வேண்டும். ஒன்றும் மட்டும் தெளிவு நம்மை வைத்து நம்மிடமே அரசியல் செய்கிறார்கள். அரசானது வருவாய் ஈட்டும் நோக்குடன் செயல்படுமாயின் எத்துணை போராட்டமும் ஒரு பொருட்டல்ல. தொடக்கப்பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் செய்தி வருகிறது. அப்படி என்றால் தாள் 1-ன்றின் நிலை என்ன? அதற்கான கோரிக்கைகள் என்ன?
    ஒரு போராட்டமானது திட்டமிட்ட கொள்கைகளையும், தங்களின் கோரிக்கை எம்முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதையும் அறிவிப்பதே சாலச்சிறந்தது. போராட்டமானது பொது பயன் கருதி நடைபெற வேண்டுமே தவிர பயனாளிகளின் நலன் கருதி நடைபெறுதல் கூடாது.


    பணிவுடன்
    புகழேந்தி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி