MBBS - விண்ணப்பம் புதிய வசதி அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2018

MBBS - விண்ணப்பம் புதிய வசதி அறிமுகம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில், சேருவதற்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.
இதுவரை, 36 ஆயிரத்து, 859 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. வரும், 18ம் தேதி வரை, விண்ணப்பங்களை, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பெறலாம் அல்லது, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 19க்குள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம், மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர்ந்ததா என்பதை, www.tnmedical selection.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த இணையதள பக்கத்தில்உள் சென்று, விண்ணப்ப படிவத்தின் எண் அல்லது, 2018, 'நீட்' தேர்வின் வரிசை எண் என, ஏதாவது ஒன்றை பதிவு செய்து, விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

நாளை கடைசிகால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, இணையதளத்தில், 14 ஆயிரத்து, 525 பேர்பதிவிறக்கம் செய்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'தலைவர், சேர்க்கை குழு, தமிழக கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலை, மாதவரம், பால் பண்ணை, சென்னை - 51' என்ற முகவரியில், நாளை மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி