உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2018

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்?

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமை பட்டியல் (Panel) இல் சிறு சிறு correction சரி செய்து கொண்டு இருப்பதால்  இன்று இரவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாளை காலை 11 மணிக்கு வெளியிட 100% வாய்ப்பு. வருகிற 02/08/2018 (வியாழக் கிழமை) அன்று கலந்தாய்வு நடக்க இருப்பதாக தகவல்.

3 comments:

  1. குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டுள்ளபோது நாமும் எத்தனை தேர்வுகளுக்குத் தான் படித்துக் கொண்டே இருப்பது? தேர்ச்சி பெற்றும் என்ன பிரயோஜனம்? என்ன விடிவுகாலம்? இஷ்டத்திற்கு தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்து வீடு வீடாகச் சென்று ஆள்பிடித்து இருக்கும் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் படித்துவிட்டு இப்பொழுது தேர்வு, தேர்வு என்று வாழ்க்கையைத் தொலைத்து தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலைக்கு வழி இல்லாமல் நொந்து கிடக்கும் வகையில் அரசியல் வியாதிகளும், அரசு அதிகாரிகளும் நாளுக்கு ஒரு திட்டம் கொண்டுவந்து வாழ்க்கையை நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தகுதி இருக்கா என்றார்கள்! அதிகமாகவே இருக்கு என்றோம். அதில் வயது அதிகமாக உள்ளவர்கள் பணிவாய்ப்பே பெற்றுவிடக்கூடாது என்று அறிவியல் பூர்வமான முறையில் கணக்கிட்டு வாழ்க்கையை கெடுத்தார்கள். இப்பொழுது மற்றோர் தேர்வு எழுத வேண்டும். இப்படியே தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பது தற்போது படித்தவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. ஆனால் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் சாப்பாடு போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் நிலை? வரலாறு காணாத கல்விச் செலவுகள் என்று சமாளித்தாக வேண்டுமே! நாங்கள் போய் கோச்சிங் சென்டரிலேயே தங்கி பயில முடியுமா? எப்போது இந்த நிலை மாறுமோ?.....

    ReplyDelete
  2. கணிப்பொறியில் தான் அனைத்து வேலைகளும் என்று நிலை வந்த பிறகு கணிப்பொறியை இயக்குவதற்கு என்று இதுவரை யாரையும் நியமனம் செய்ய வில்லை. வருவாய்த்துறை வேலை, வேலைவாய்ப்பக வேலை.... என்று அனைத்து வேலைகளும் நடக்கும் இடம் பள்ளி என்றாகிவிட்டது. இப்பணியைச் செய்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுத்து பணிகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா? கல்வித்துறை அதிகாரிகள் கேட்கும் நாள்தோறும் பல்வேறு விவரங்கள் என்று பணிச்சுமை நாள்தோறும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை எனும் போது இந்த நெருக்கடிகளை சமாளிக்க தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர் என்பது உண்மை. ஒவ்வொரு பள்ளிக்கும் கணிப்பொறி இயக்குவதற்கு என்று தனியாக ஆட்களை நியமிப்பது தான் சிறந்த வழி! பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழுநேரமாகவும், வீட்டில் வந்தும் இந்த பணிச்சுமைகளை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களை கணிப்பொறி இயக்குபவர்களாகவும் நியமிக்கலாம். செய்யுமா அரசு? செய்யவேண்டியவற்றை செய்யாமல் பிறகு விசாரணை என்றால் எப்படி? நிறைய அலுவலகங்களில் ஆட்களே இல்லை. பிறகு என்னதான் செய்வார்கள்?

    ReplyDelete
  3. 100 தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் பட்டியலை இதுவரை சரியான நேரத்தில் கொடுக்க முடியவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசுக்கு புரிகிறதா இல்லை புரியாமல் செயல்படாமல் உள்ளதா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி