10, 11, 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு கூடாது: பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2018

10, 11, 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு கூடாது: பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு


10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பெற்றோர் தரப்பில் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை றே்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பள்ளி முடிந்த பிறகு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் முடிந்த பிறகு எக்காரணத்தை முன்னிட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் எழுத்து மூலமாக பெற்றோரின் அனுமதி பெற்று சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றிக்கையை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

21 comments:

  1. அருமை ஆனால் பல பள்ளி நிர்வாகிகளீன் அழுத்தம் காரணமாக பெற்றோர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்

    ReplyDelete
  2. காலை மாலை சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிகளில் இருப்பதினால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுமே ஒழிய வேறு எந்த பயனும் இல்லை. எனவே பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்தது சரியே.இதை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் நடைமுறை படுத்துங்கள்.

    ReplyDelete
  3. பெருநகரில் வசிக்கும் மாணவர்களுக்கும், வீட்டில் கவனமெடுக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும், ஒரு பாடத்திற்கு ஒரு Tuition வைத்துக்கொள்ளும்வசதியுடைய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இந்தசட்டம் Ok.பள்ளியில்மட்டுமே படிப்பு வீட்டிற்குபோனவுடன் Mobile, Laptop bikeriding, friends னு சுற்றும் பெற்றோர்சொல் கேட்காத குழந்தைகளை எப்படி படிக்கவைப்பது?

    ReplyDelete
    Replies
    1. Ippudi Torture panna Aven Eppo free ya irunppan

      Delete
  4. சொல்லுதல் யார்க்கும் எளிது.....comedown to the field. and see what is happening?

    ReplyDelete
  5. விடுமுறை விடுமுறையாகவே இருக்க வேண்டும்

    ReplyDelete
  6. மிக முக்கியமான முடிவு. அதிலும் பெண் பிள்ளைகள் உடல் நலனுக்கான அவசிய முடிவு . பாராட்டுக்கள். ஆனால் இந்த முடிவை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் ...நடக்குமா..?

    ReplyDelete
  7. மேலும் இதை நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா...?

    ReplyDelete
  8. இந்த சட்டம் அரசு பள்ளிகளுக்கு பொருந்துமா..?

    ReplyDelete
  9. Kumaravel& thiruvengadam வந்து பாரும் மாணவர்களை அப்ப சொல்லு

    ReplyDelete
  10. இந்த அறிவிப்பு வரவேற்க தக்க ஒன்று இதை நடைமுறைப்படுத்த கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்த வேண்டும் மாலை மற்றும் காலை நேரங்களில்

    ReplyDelete
  11. Nadaimurai puduthuma anaithu palligalum? Kavanikkuma arasu?

    ReplyDelete
  12. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் மனரீதியாக மற்றும் உடல்ரீதியாக பாதிக்கப்படவில்லையா?

    ReplyDelete
  13. எந்தவித பள்ளியாக இருந்தாலும் மாணவர்களை அதிக நேரம் பள்ளிகளில் அடைத்து வைக்க கூடாது.

    ReplyDelete
  14. Unknown sir தொடர்ச்சியாக பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் எந்தவித பயனும் இல்லை.Tution செல்லும் மாணவர்கள் வீட்டுக்கு சென்று சிற்றுண்டி சாப்பிட்டு சற்று ஓய்வு எடுத்த பிறகுதான் டியூசன் செல்வார்கள். மேலும் வீட்டில் படிக்கவைப்பதும் அவர்களை கண்காணிப்பதும் பெற்றோர்களின் கடமை எனவே சில மாணவர்கள் ஊர் சுற்றுவார்கள் என்பதற்காக காலை 7 மணி to மாலை 6 மணி வரை பள்ளி நடத்துவதால் எந்தவித நன்மையும் இல்லை.supose நாடு முழுவதும் பள்ளிகள் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் என்று சட்டம் இயற்றினாலும் அப்பவும் சிலர் தன் பிள்ளைகளை இரவு 9 மணிக்கு மேல் நள்ளிரவு 1 மணி வரை டியுஷன் அனுப்புபவர்களும் உண்டு.அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. எனவேதான் பள்ளிக்கூடம் பள்ளியாக மட்டுமே நடக்கவேண்டும்.மற்ற நேரங்களில் படிப்பதும் ஊர் சுற்றுவதும் அது அவனவன் செயல் .

    ReplyDelete
  15. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் மனரீதியாக மற்றும் உடல்ரீதியாக பாதிக்கப்படவில்லையா?அல்லது அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் அடிமைகள்,இளிச்சவாயர்கள் என்று நினைத்து கசக்கி பிழிகின்றார்களா? ஒருவேளை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் மட்டுமே உளவியல் அறிந்தவரா? எது எப்படியோ அரசு பள்ளி ஆசிரியர்களை சுதந்திரமாக பணியாற்றவிடாமல் அடக்குமுறையை கையாள்வது சிறந்த பலன் அளிக்குமா என்பது போகப்போக தெரியும்

    ReplyDelete
  16. ஐயா ஒரு கண்ணுல vennaiyum மறு கண்ணுல சுண்ணாம்பு வைக்காம சரியா சொல்லுங்க.

    ReplyDelete
  17. மாணவர்கள் என்ன இயந்திரமா? உளவியல் ரீதியாக மாணவர்களை நடத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

    ReplyDelete
  18. மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளும் வரவேற்கத்தகுந்தவைகளே. நடைமுறைப்படுத்தப்பட்டால் நல்லது. பாரபட்சமின்றி அரசு துரிதமாக செயல்படுத்த வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி