கழிப்பறையை மேம்படுத்த பரிசு தொகை ரூ.10 ஆயிரத்தை பள்ளிக்கே தந்த கனவு ஆசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2018

கழிப்பறையை மேம்படுத்த பரிசு தொகை ரூ.10 ஆயிரத்தை பள்ளிக்கே தந்த கனவு ஆசிரியர்


கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்

பரிசாக கிடைத்த ரூ.10 ஆயிரத்தை பள்ளி கழிவறை மேம்படுத்த வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் செல்வசிதம்பரம். இவரை பாராட்டி பல்வேறு விருதுகளும்வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  பள்ளிக்கல்வி துறை சார்பில் வழங்கப்பட்ட கனவு ஆசிரியர் விருதுக்கு செல்வசிதம்பரம் தேர்வு செய்யப்பட்டு திருச்சியில் நடந்த விழாவில் விருதும் அதற்கான பரிசு தொகை ரூ.10ஆயிரமும் பெற்றார்இந்நிலையில் பள்ளியில் காமராஜர் பிறந்த தினவிழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர்கள் சொக்கலிங்கம் மற்றும் முருகபாஸ்கர் ஆகியோரிடம் கனவு ஆசிரியர் விருது பெற்ற செல்வசிதம்பரம் தான் கனவு ஆசிரியர் விருதுடன்பெற்ற பரிசுத்தொகையான 10ஆயிரம் பணத்தை தனது பள்ளியில் மாணவர்கள் பயன் படுத்தும் கழிப்பறையை மேலும் மேம்படுத்த நன்கொடையாக வழங்கினார். அனைவரும்பாராட்டினர்.

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி