'நெட்' தேர்வில் 11.48 லட்சம் பேர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2018

'நெட்' தேர்வில் 11.48 லட்சம் பேர்

உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வான, 'நெட்' நேற்று நாடு முழுவதும் நடந்தது.உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, நெட் தகுதி தேர்வு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., யால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யு.ஜி.சி.,யின் சார்பில், இந்தத் தேர்வை, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நேற்று நடத்தியது. நாடு முழுவதும், 91 நகரங்களில், 2,082 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.மொத்தம், 84 பாடப்பிரிவுகளுக்கு, 11.48 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதுவரை மூன்று தாள்களுக்கு தேர்வு நடத்தியதை மாற்றி, இம்முறை ஒரு பொது பாடம் மற்றும் ஒரு விருப்ப பாடத்துக்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், முன்னிலை பெறும், 6 சதவீதம் பேர், தேர்ச்சி பெறுவோராக அறிவிக்கப்படுவர்.

2 comments:

  1. en ugc Net exam vaigaringa pass pannitu six years job podala appuram en exam

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான கேள்வி ஆனால் தனியார் கல்லூரிகளில் பணி புரிபவர்களுக்கும் நெட் தேர்வு அவசியமாகிறது மேம்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி