Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வரலாற்றில் இன்று 14.07.2018


சூலை 14 (July 14) கிரிகோரியன் ஆண்டின் 195 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 196 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 170 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1223 – எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.
1865 – எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர்.
1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் “சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற” நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.
1933 – ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.
1948 – இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.
1958 – ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.
1965 – மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.
1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.
1976 – கனடாவில் மரணதண்டனை முறை ஒழிக்கப்பட்டது..
1989 – பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.
1995 – MP3 பெயரிடப்பட்டது.
1995 – இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
1997 – சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபா வந்தடைந்தன.
2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.
2007 – ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.

பிறப்புகள்

1862 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (இ. 1918)
1913 – ஜெரால்ட் ஃபோர்ட், 38வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (இ. 2006)
1918 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடியத் திரைப்பட இயக்குநர் (இ. 2007)
1929 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியலாளர்
1935 – ஐ-இச்சி நெகிழ்சி, சப்பானிய வேதியியலாளர்
1938 – அனுருத்த ரத்வத்தை, இலங்கை அரசியல்வாதி (இ. 2011)
1943 – ரோகண விஜயவீர, இலங்கைப் புரட்சியாளர் (இ. 1989)
1947 – நவின்சந்திரா ராம்கூலம், மொரிசியசின் 3வது பிரதமர்
1954 – சரத்குமார், தமிழகத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
1967 – ஹசான் திலகரத்ன, இலங்கைத் துடுப்பாளர்
1968 – மைக்கேல் பால்மர், சிங்கப்பூர் அரசியவாதி
1987 – சாரா கேனிங், கனடிய நடிகை

இறப்புகள்

1827 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)
2004 – சுவாமி கல்யாண் தேவ், இந்தியத் துறவி (பி. 1876)
2008 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)
2015 – எம். எஸ். விஸ்வநாதன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1928)

சிறப்பு நாள்

பிரான்ஸ் – பாஸ்டில் நாள் (1789)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives