பேராசிரியர்களுக்கான ஊதியம்: ரூ.16 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை உயர்வு- 2017 அக்டோபர் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்ப - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2018

பேராசிரியர்களுக்கான ஊதியம்: ரூ.16 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை உயர்வு- 2017 அக்டோபர் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்ப

பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கடந்தாண்டு அக்டோபர் முதல் ஊதியஉயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு, பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில், திருத்திய ஊதிய விகிதம் மற்றும் படிகளை கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் கருத்தியலாகவும், 2017-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் பணப்பயனாகவும் வழங்கியது.


பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் ஆளுகைக்கு உட்பட்ட, மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதிய விகிதம் மற்றும் படிகளை திருத்த மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழுவை அமைக்கிறது. இந்த ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் தமிழக அரசால் திருத்திய ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது மத்திய அரசால் அமைக்கப்பட்ட 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், திருத்திய ஊதிய விகிதம் மற்றும் படிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் ஆளுகைக்கு உட்பட்ட தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் உள்ள பணியாளர்கள் தங்கள் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் படிகளை, கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் கருத்தியலாகவும், 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் பணப்பயனாகவும் பெறலாம்.இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் இணையான பணியாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதிய உயர்வு பெறுவார்கள்.இந்த திருத்திய ஊதிய விகிதத்தை அமல்படுத்துவதால் ஆண்டுக்கு ரூ.500 கோடி கூடுதலாக செலவாகும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. Pavam romba part time trs aa vida romba kastapduranga. Salary rise panna vendiyathu than samy. Engalukku nidhi illai.seven years same reply

    ReplyDelete
  2. Pavam romba part time trs aa vida romba kastapduranga. Salary rise panna vendiyathu than samy. Engalukku nidhi illai.seven years same reply

    ReplyDelete
  3. Govt servant Ku 2.54 madangu koduthomnu oru periya poiya sonnenga...... Iduvum appadithana.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி