தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2018

தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியீடு!


தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று  முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன் 5-ம் தேதி அறிவித்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் பிளாஸ்டிக் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வா் பழனிசாமி சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்டைகிறது.


இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீா் பாதிக்கப்படுகிறது. விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொண்டு பாதிப்படைகின்றன. எனவே தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நலன் கருதி வருகிற 2019 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் பாரம்பரிய முறையான வாழையிலை, பாக்கு மட்டைகளினாலான தட்டு, தாழம்பூ இலை, துணிப் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி