3 மாதங்கள் பொருட்கள் வாங்காவிட்டாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது: அமைச்சர் காமராஜ் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2018

3 மாதங்கள் பொருட்கள் வாங்காவிட்டாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது: அமைச்சர் காமராஜ் தகவல்

3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதனால் பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என்று திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ் தொடர்ந்து ரேஷன் பொருட்களை வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஒரு அறிவுரை தான் வழங்கியது என்றும் கொள்கை முடிவு இல்லை என்றும் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். மேலும் இந்த அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது என்று கூறியுள்ளார்.

முன்னதாக ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருக்கும் குடும்பங்களின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்கிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய முடியும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி