அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2018

அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி!

அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியில் கல்வி பயில மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்வியை விட அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதிலேயே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது
இதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அதற்கேற்ப புதிய உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வந்தாலும் முழுமை பெறுவதில்லை. மாநிலத்தில் சுமார் 600 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்களும் இல்லை. இதனிடையே கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரத்து 863 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களும் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுகின்றனர். இடையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 500 பேர் மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வும் அறிவிக்கப்படவில்லை.

சில அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் கெஸ்ட் லெக்சரர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் தற்காலிக ஆசிரியர்களை வைத்து சமாளிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவித்தபடி காலதாமதமின்றி ஆசிரியர்களை உடனே நியமிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

12 comments:

  1. அனைத்து இளைஞர்களும் பயன்பெறும் வகையில் உதவி பேராசிரியர் எழுத்துத் தேர்வின் மூலம் நிரப்பப்பட்டால் திறமை வாய்ந்த ஏழை உதவி பேராசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. we are waiting for more than ten years you are an young person so wait. we also waited for a long time.Think about us we completed all the ugc noms and waiting . why should again we have to prepare for exam.

      Delete
  2. அனைத்து வகை உதவி பேராசிரியர் பணியிடங்களும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பும் போது கலை அறிவியலில் மட்டும் நேர்காணல் என்பது ஏற்புடையதாக இல்லை.அனைவருக்கும் வாய்ப்பளிக்க போட்டித் தேர்வு தேவை.

    ReplyDelete
  3. Trb only select best teacher so exam need

    ReplyDelete
  4. எழுத்துத்தேர்வு என்ற நெட்-தேர்வை முடித்து விட்டு, முனைவர் பட்டம் எனும் பெருங்கடலைத்தாண்டி, உழைப்பு என்ற 10 ஆண்டுகள் மாணவக்கண்மணிகளுடன் அயராது பாடுபட்டு, பிறகுதான் உதவிப்பேராசிரியர் என்ற நிலையை அடைகிறார்கள். தேர்வு என்ற முறையில் மனனக்கல்வி முறை உயர்கல்விக்கு உதவாது. அது தேவையும் இல்லை.

    ReplyDelete
  5. As per ugc set or net exam and p.hd are only applying for assistant professors it is a high qualification. so no need to exam.

    ReplyDelete
  6. ஒரு மாணவன் கல்லூரி படிப்பிற்கு நீட் கேட் காட் என நுழைவு தேர்வுகள். பள்ளிக்கூட ஆசிரியருக்கு டெட், TRB, என தகுதி தேர்வுகள். ஊழல் நடந்த polytecnic தேர்வுக்கு கூட எழுத்து தேர்வுகள் உண்டு. ஆனால் மிக அதிக ஊதியம் வழங்கப்படும் கல்லூரி பேராசிரியர் இக்கு எந்த தேர்வும் இல்லை என்பது முரண்பாடு உடையது. பிஎச்.டி என்பது உயர் கல்வி மட்டுமே. நெட்/செட் தகுதிக்கு பிஎச்.டி விலக்கு வழங்குவதால் posting appointment க்கு அனைவரையும் எழுத்து தெரிவு மூலம் தேர்வு செய்வதே சரி.

    ReplyDelete
  7. Dear Colleague,
    No need to conduct written test, Ph.D is the required qualification and/or NET/SLET as per UGC norms.
    In Forth Coming TRB , there is no change in any procedure. The similar way as like 2013 TRB they are going follow to recruit about 2000 Assistant Professors. So No written test, Only Interview and certificate verification. No போட்டித் தேர்வு.

    ReplyDelete
  8. Every year TRB Publishes the schedule,but they don't recruit college teachers.This year also it is going to be followed.
    Only frustration remains in the minds of everyone.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி