முறையாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு - உ.பி அரசு அதிரடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2018

முறையாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு - உ.பி அரசு அதிரடி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் முறையாக பணியாற்றவி்ல்லை என்றால் 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றது. அக்கட்சி சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி முடிவுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் முறையாக பணியாற்றவில்லை என்று அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனை தடுக்க உத்தரப்பிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முறையாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில்  பின்பற்றப்படவில்லை என்றும் இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

12 comments:

  1. நல்ல முடிவு

    ReplyDelete
  2. நல்ல முடிவு

    ReplyDelete
  3. Enthha plana Tamil nadu layum konduvaranum

    ReplyDelete
  4. Supper. Give Chance to youngsters. Tamil Nadu government will follow UP rule

    ReplyDelete
  5. Pongada bjp velakannaigala

    ReplyDelete
  6. போட்டி தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு நிரந்தர ஓய்வு

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Nalini pgtrb zoology second listkkaaka wait pannunavanka please contact me
    9655255806

    ReplyDelete
  9. Yapo welfare school posting poduvanga nu thariuma.. illa posting pottutangala.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி