வாட்ஸ் அப்பில் இனி 5 பேருக்கு மேல் தகவல் அனுப்ப முடியாது - வருகிறது புதிய கட்டுப்பாடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2018

வாட்ஸ் அப்பில் இனி 5 பேருக்கு மேல் தகவல் அனுப்ப முடியாது - வருகிறது புதிய கட்டுப்பாடு!


வதந்தி பரவுவதை தடுக்க ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தகவல் அனுப்ப முடியாத வகையில் புதிய கட்டுப்பாட்டை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி அப்பாவிகள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே வதந்தி பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.


அதன்படி வாட்ஸ் அப் நிறுவனம் வதந்தி பரவுவதை தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. வாட்ஸ் அப் தகவலை ஒரே நேரத்தில் பல நபர்களுக்கு பகிர்வதை கட்டுப்படுத்த முயற்சியில் இறங்கியிருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. சோதனை முயற்சியாக 5 பேருக்கு மட்டுமே வாட்ஸ் அப்பில் தகவல் பகிர்வதை நடைமுறைப்படுத்தி இருப்பதாக  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குயிக் பார்வர்டு வசதியையும், அகற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் போது வாட்ஸ் அப் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி