BE - ஆன்லைன் கவுன்சலிங் எவ்வாறு நடைபெறும் அண்ணா பல்கலை விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2018

BE - ஆன்லைன் கவுன்சலிங் எவ்வாறு நடைபெறும் அண்ணா பல்கலை விளக்கம்!

பொறியியல் படிபுக்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் நடக்க இருப்பதால், ஆன்லைன் கவுன்சலிங் எப்படி நடக்கும் என்பது குறித்து அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் நேற்று விளக்கம் அளித்தனர்.

பொறியியல் படிப்பு சேர்க்கை பொதுப்பிரிவுக்கான கவுன்சலிங் நடக்க உள்ளது. இந்த கவுன்சலிங் 5 குழுவாக பிரிக்கப்படும்.
அதில் 6  படிநிலைகள் மூலம் மாணவர்கள் தங்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.

* முன்பணம் இணையம் மூலம் செலுத்துதல்- இதற்கு 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்.
* ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்- இதற்கு 2 நாள் ஒதுக்கப்படும்.
* தற்காலிக ஒதுக்கீடு குறித்து எஸ்எம்எஸ் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
* தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்ய அவகாசம் அளிக்கப்படும். 2 நாட்கள் மாணவர்கள் எடுத்துக் கொ்ள்ளலாம்.
* உண்மை ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படும். இதற்காக ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படும்.
* ஒதுக்கீடு குறித்த வெளியீடுகள்  மற்றும் காலி இடங்கள்  குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படும்.

கவுன்சலிங்கில் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்ய உள்ள கல்லூரிகளில் குறியீட்டு எண் அல்லது கல்லூரியின் பெயர், அல்லது மாவட்டம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு மாணவர்கள் தெரிவு செய்த பட்டியல் இணையத்தில் வரும்.  இட ஒதுக்கீடு குறித்த படிநிலையில், 3 வாய்ப்புகள் அளிக்கப்படும் அதில் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உறுதி மொழி அளிக்க வேண்டும். மேற்கண்ட ஆன்லைன் கவுன்சலிங் குறித்த விவரங்கள் புரியாமல் உள்ள மாணவ மாணவியர் 44 மையங்களில் சென்று கல்லூரிகள், பாடங்களை பதிவு செய்து இட ஒதுக்கீடு பெறலாம். இது தொடர்பான தெளிவான விளக்கம் அடங்கிய தொகுப்பு அண்ணா பல்கலைக் கழக இணையத்தில் விரைவில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி