B.Ed Admission 2018 - நாளைமுதல் கலந்தாய்வு தொடக்கம் - முழு விவரம் உள்ளே. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2018

B.Ed Admission 2018 - நாளைமுதல் கலந்தாய்வு தொடக்கம் - முழு விவரம் உள்ளே.


இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கப்பட உள்ளது.
கலந்தாய்வு தேதி, கட்-ஆஃப் விவரங்கள் கலந்தாய்வை நடத்தும் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின் www.ladywillingdoniase.comஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 600-க்கும் அதிமான பி.எட். கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,707 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்வி நிறுவனம் நடத்தி வருகிறது.2018-19 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்க உள்ளது. இதற்கு மொத்தம் 6,669 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 6 விண்ணப்பங்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.62 பேர் பொறியியல் பட்டதாரிகள்: விண்ணப்பித்தவர்களில் 62 பேர் பி.இ. பட்டதாரிகள் ஆவர். பொறியியல் பட்டதாரிகளுக்கென மொத்த பி.எட். இடங்களில் 116 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கட்டணம் எவ்வளவு?

 கலந்தாய்வில் பங்கேற்க வருவோர், 'The Secretary, Tamilnadu B.Ed. Admission, Chennai' என்ற பெயரில் கந்தாய்வுக் கட்டணத்தை வரைவோலையாகக் கொண்டு வர வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பு (எஸ்.சி.), பழங்குடி (எஸ்.டி.) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.1,000, மற்ற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.2,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கு...

பி.எட். சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், பொறியியல் பட்டதாரிகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

1 comment:

  1. Yarum thangal pillaigalai b.ed padikka vaikka vendam tamilnadu la posting ella

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி