B.Ed - பி.எட்., கவுன்சிலிங் நாளை துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2018

B.Ed - பி.எட்., கவுன்சிலிங் நாளை துவக்கம்

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, வரும், 24ம் தேதி வரை நடக்கிறது.தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 14அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உட்பட, 500க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இ
ந்த கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., இரண்டு ஆண்டு பட்டப்படிப்புகள் நடத்தப் படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,707 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு, அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி பொறுப்பு முதல்வர் தில்லை நாயகி தலைமையிலானகமிட்டி, இந்த ஆண்டு கவுன்சிலிங்கை நடத்துகிறது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, 6,073 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, வரும், 18ம் தேதி முதல், 24ம் தேதி வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், தில்லை நாயகி வெளியிட்டு உள்ளார். இதன்படி, நாளை சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்.

வரும், 19ல், தமிழ், ஆங்கிலம்; 20ல், தாவரவியல், விலங்கியல்; 21ல், இயற்பியல், வரலாறு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடத்தப்படும். மேலும், வரும், 22ல், வேதியியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல்; 23ல்,புவியியல், கணினி அறிவியல், கணிதம் மற்றும் 24ம் தேதி, கணிதம் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

4 comments:

  1. arum thangal pillaigalai b.ed padikka vaikka vendam tamilnadu la posting ella

    ReplyDelete
  2. Yaarum b.ed padikkathing, naangale padatha paadu padrom

    ReplyDelete
  3. I did not receive the counselling card??
    What I do???

    ReplyDelete
  4. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 crore) All donors are to reply via Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி