அரசு உத்தரவையும் மீறி டியூசனு எடுக்கும் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2018

அரசு உத்தரவையும் மீறி டியூசனு எடுக்கும் ஆசிரியர்கள்

தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 5030 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. குமரிமாவட்டத்தில் 54 அரசு மேல்நிலை பள்ளிகள், 64 அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகள், 22 சுயநிதி மேல்நிலை பள்ளிகள், 96 மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் உள்ளன.

இதில் பெரும்பாலான பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் சென்டர் நடத்தி வருகின்றனர்.அந்த சென்டரில் கட்டாயமாக மாணவ, மாணவிகளை படிக்க அழைக்கின்றனர். இப்படி டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள்வகுப்புகளில் சரியாக பாடங்களை நடத்துவது இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் டியூசன் சென்டர்களில் வகுப்புகளை தெளிவாக மாணவ, மாணவிகளுக்கு புரியும் வகையில் நடத்துகின்றனர்.

இதனால் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களை எடுத்து படிக்கும் மாணவ, மாணவிகள் கட்டாயம் இந்த டியூசனுக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனை சாதகமாக்கி ஆசிரியர்கள் ஒரு பாடத்திற்கு 7500 கட்டணம் வசூலிக்கின்றனர். இங்கு மாணவ, மாணவிகளைஒரே இடத்தில் வைத்து ஒலிபெருக்கி மூலம் பாடங்கள் நடத்துகின்றனர். இதற்காக பல ஆசிரியர்கள் சேர்ந்து மண்டபங்கள் வாடகைக்கும், விலைக்கும் வாங்கியுள்ளனர். கடந்த வருடம் மத்திய அரசு எம்பிபிஎஸ் மற்றும் பல மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்ப்புக்கு நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு கட்டாயம் என அறிவித்தது.

அதன்படி மாணவர்கள் நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.  மருத்துவ படிப்புக்கு செல்லும் மாணவர்கள் கண்டிப்பாக நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், டியூசன் சென்டர்களில் நீட் தேர்வுக்கு என்று தனியாக பாடம் நடத்தப்படுகிறது. இதற்காக ஒரு மாணவருக்கு 20 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் பல இடங்களில் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து வகுப்புகளை நடத்தி பல லட்சம் பணம் சம்பாதித்து வருகின்றனர். இதுபோல் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் டியூசன் சென்டர்களை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் டியூசன் நடத்தக்கூடாது எனஉத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல் அவர்கள் குழுவாக சேர்ந்து பணம் பார்க்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘குமரி மாவட்டத்தில்  ஆசிரியர்கள் ஒன்றிணைந்து  நடத்தும் டியூசன் சென்டர்களில் குறைந்தது 50 முதல் 100 மாணவ, மாணவிகள் இருப்பார்கள். மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் இந்த டியூசன்களில் படிக்க செல்கின்றனர். டியூசனில் வகுப்புகளை எடுக்கும் அக்கறையை பள்ளியில் ஆசிரியர்கள் காண்பிக்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க  மாவட்ட கல்வித்துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

13 comments:

  1. Avan avan kollai adikara athai ketka thupilla.....studentku nallathu solli kodukorom athu thappa.....

    ReplyDelete
  2. Avan avan kollai adikara athai ketka thupilla.....studentku nallathu solli kodukorom athu thappa.....

    ReplyDelete
  3. doctor ellarum govt. work pannitu private hospital potrukanga

    ReplyDelete
  4. Aasiriyargal yaarum lanjam vaaguvathillai,pirar panatthai parippathillai. Thangalukku kidaikkum voivu nerathil tuition edukkindranar(arasu doctors pola).Enakku therintha varai entha arasu aasiriyarum thangal palli maanaavargalukku tuition eduppathillai...

    ReplyDelete
  5. ஏண்டா நாட்டில் யார் அவரவர் வேலையை
    அவரவர் பார்க்கிறார்கள்...சைடுல யாருமே லஞ்சத்தை வாங்கவே இல்லையா
    ...ஏண்டா கோடிகோடியா வாங்குறான்
    அவனை கண்ணுக்கு தெரியாதா.. பள்ளிகளில் கல்லூரியில் sc st க்கு பாதி இட ஒதுக்கீடு உண்டு..அதை யார்டா follow பன்றா
    அனைவர்கிட்டேயும்பீஸை வாங்கி கஜானா வை நிறப்புறான்...அதைதட்டி கேட்க துப்பில்லை ஆசிரியர்களை குறைகூறுவதே பிழப்பாபோச்சு..


    ReplyDelete
  6. Replies
    1. பெரியதாக அடிப்பவனை விட்டுவிட்டு ஆசிரியர்களின்
      பிழப்பினை குற்றம் சொல்ல
      கூடாது...இதுவே மை பிராப்ளம்

      Delete
  7. காலேஜ் வாத்தியாருக்கு எதுக்குடா ஒன்னற லட்சம் ரூபாய் சம்பளம் தராங்க, ??? மாசம் முப்பது ஆயிரம் மட்டும் குடுக்கலாமே, வேலை நேரம் கூட கம்மி தான்

    ReplyDelete
    Replies
    1. Adukku nenkalum college ponga.
      Why did you choose school

      Delete
  8. What about govt.doctors running private clinic

    ReplyDelete
  9. What about govt.doctors running private clinic

    ReplyDelete
  10. நம்ம தவறை ஒப்புக்கொள்ள மாட்டோம் அடுத்தவனை குறை சொல்லிட்டே போரோம் நாம் திருந்தி மற்றவர்களை திருத்த முயற்சி செய்யலாம் மாத பிதா குரு தெய்வம் வரிசையில் நாம் தாம் உள்ளோம் மற்றவர் இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி