Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் மத்திய அரசு தீவிர பரிசீலனை


வதந்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் எனப்படும் தகவல் பரிமாற்ற சேவையை, உலகம் முழுவதும், 130 கோடி பேர், பயன்படுத்தி வருகின்றனர்.நம் நாட்டில் மட்டும், 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர்.இதன் வாயிலாக, தவறான தகவல்களும், வதந்திகளும் எளிதில் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும், பல அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், சமீபத்தில் நடந்தன.இதையடுத்து, வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்துக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலர், அஜய் பிரகாஷ்சாஹ்னியை, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மாத்யூ ஐடிமா, நேற்று சந்தித்து பேசினார்.வாட்ஸ் ஆப்வாயிலாக வதந்திகள் பரவுவதை, உடனடியாக கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து,இருவரும் விவாதித்தனர்.

அப்போது, வாட்ஸ் ஆப் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்ததாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், வாட்ஸ் ஆப் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள், எங்கு பாதுகாக்கப்படும் என்பதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டியதாக கூறப்படுகிறது.தகவல்கள் அனைத்தும், இந்தியாவில் தான்பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை, மத்திய அரசுமுன் வைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives