காவல்துறை சார்பாக அரசுப்பள்ளிகளில் நூலகம் திறப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2018

காவல்துறை சார்பாக அரசுப்பள்ளிகளில் நூலகம் திறப்பு!


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 அரசுப்பள்ளிகளில் காவல்துறை சார்பில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள 3 இடங்களில் நூலகம் திறக்கப்பட்டுள்ளன.
சித்தாதூரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். ஏற்கனவே உள்ள நூலகங்களில் குறிப்பிட்ட அலமாரிகளை ஒதுக்கீடாக பெற்று அங்கு காவல்துறை சார்ந்த புத்தகங்களை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறையின் இந்த புதிய முயற்சியை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்களுக்காக நூலகத்தை அமைத்து கொடுத்த காவல்துறைக்கு பள்ளி மற்றும் கல்வித்துறை சார்பாக நன்றி தெரிவிப்பதாக தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி