நர்சிங் படிப்பு விண்ணப்பம்: முன்கூட்டியே வினியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2018

நர்சிங் படிப்பு விண்ணப்பம்: முன்கூட்டியே வினியோகம்

பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகத்துக்கு முன், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கானவிண்ணப்பம் வினியோகிக்கப்படுவதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், வழக்கமாக, மருத்துவ சேர்க்கை முடிந்த பின், பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் நடக்கும்.அதன் பின், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம் இருக்கும். இதனால், மருத்துவ இடம் கிடைக்காத மாணவர்கள், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேருவர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள், டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர்வர். ஆனால், இம்முறை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் முற்றிலும் நிறைவடையாத நிலையில், கடந்த, 22ம் தேதி முதல், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.கல்வியாளர்கள் கூறுகையில், 'மருத்துவ படிப்பு மற்றும் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் சேருவர். 'இதைக்கருத்தில் கொண்டே, மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின் பி.எஸ்சி., நர்சிங் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், இம்முறை டிப்ளமோ நர்சிங் விண்ணப்பங்கள் முதலில் கொடுக்கப்படுவதால் மாணவர்கள்குழப்பம் அடைந்துள்ளனர்' என்றனர்.மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறுகையில்,''தற்போது டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் மட்டுமே வினியோகிக்கப்படுகின்றன.

இது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அதை மாற்ற முடியும். ''மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின், பி.எஸ்சி., நர்சிங் சேர்க்கை நடத்துவதா அல்லது டிப்ளமோ நர்சிங் சேர்க்கை நடத்துவதா என, பின்னர் முடிவு செய்யப்படும்.தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி