அரசு பள்ளிகளில் கணினி வழி பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2018

அரசு பள்ளிகளில் கணினி வழி பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும், ஜாபர்கான்பேட்டை, உயர்நிலை பள்ளி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
அந்த பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி கல்வித்துறை துணை கமிஷனர், மகேஸ்வரி ரவிக்குமார் உடன் இருந்தார்.பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

மாநகராட்சி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. 90 சதவீத பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற, மாணவர்களை தயார் செய்து வருகின்றன. 3,000 அரசு பள்ளிகளில், விரைவில், 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்கப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, கணினி வாயிலாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி