மாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2018

மாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

மாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த புகார் தனது கவனத்திற்கு வரவில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கூகலூரில் அரசு உதவி பெரும் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை செங்கோட்டையன் திறந்துவைத்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சரை பாராட்டும் வகையில் பள்ளி சார்பில் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தனியார் பள்ளி அளவிற்கு அரசு பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி