மாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2018

மாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'


''மாணவர்களுக்கு கையடக்க கணினி எனும், 'டேப்' வாங்க, ஒரு வாரத்தில் டெண்டர் முடிவு செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில், நேற்று அவர் அளித்த பேட்டி: நொய்யல் ஆற்றைபாதுகாக்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதி மூலம், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தொழிற்சாலை கழிவுகள், அங்கு சேராமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து, அங்குள்ள கழிவுகளை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்கான பணிகள், விரைவில் துவங்கும்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தற்போது, அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி படிக்க, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, ஆங்கில வழி வகுப்புகளை, இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், இரண்டு வகுப்புகள் கூடுதலாக நடத்தப்படும்.மாநில அளவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' நடத்தப்படும். ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு புதிய பாடத் திட்டம் வந்துள்ளதால், அம்மாணவர்கள், 'க்யூ ஆர் கோடு' மற்றும் இணையதளம் வழியேகல்வி பயில, கையடக்க கணினி எனும், 'டேப்' வழங்கப்படுகிறது.இதற்காக, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, இந்த வாரம் டெண்டர் முடிவு செய்யப்படும். விரைவாக, 'டேப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி