'நீட்' விவகாரத்தில் அரசின் முடிவு: அமைச்சர் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2018

'நீட்' விவகாரத்தில் அரசின் முடிவு: அமைச்சர் விளக்கம்

''நீட் தேர்வு விவாகரத்தில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோம்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின், 200வதுஆண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது.விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று, மருத்துவமனையின், 200வது ஆண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்தார்.சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு, பதக்கங்களை வழங்கினார்.

பின், அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது:எழும்பூர் கண் மருத்துவமனையில், சர்வதேச தரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 2.60 லட்சம் பேருக்கு, கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில், 200வது ஆண்டு விழாவையொட்டி, 50 லட்சம் ரூபாய் செலவில்,நினைவு நுழைவு வாயில் அமைக்கப்படும். தமிழில், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம்.நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு நகல் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில், சி.பி.எஸ்.இ., எடுக்கும் நடவடிக்கையின் படியே, தமிழக சுகாதாரத் துறையின் நடவடிக்கை இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி