மாணவர் விடுதி விரைவில் திறப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2018

மாணவர் விடுதி விரைவில் திறப்பு

மூன்றரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதி, மாணவர்களின் பயன்பாட்டிற்கு, விரைவில் திறக்கப்பட உள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அடித்தட்டு மக்கள், அதிகளவில் வசிக்கின்றனர்.மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லுாரி மாணவர்கள் விடுதி, 3.64 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என, அறிவித்தார்.தண்டையார்பேட்டை, இரட்டை குழி தெருவில், மாணவர்கள் விடுதி கட்டுமான பணி, 2015 ஆகஸ்ட்டில் துவங்கி, வேகமாக நடந்து வந்தது.உடல்நல குறைவால், ஜெ., மரணமடைந்ததை அடுத்து, கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. சில மாதங்களுக்கு பின், மீண்டும் கட்டுமான பணிகள் துவங்கி, வேகமாக முடிவடைந்தன. தரைத்தளத்துடன், மூன்று மாடி கொண்ட, மாணவர்கள் விடுதிகட்டப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில், சமையலறையுடன் கூடிய உணவு சாப்பிடும் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாடிகளும், மாணவர்கள் தங்கும் அறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.அனைத்து கட்டுமான பணிகளும் முடிவடைந்த நிலையில், இக்கட்டடம், மாணவர்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி